அந்தரங்க உறுப்பில் சிறு புண்கள், அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது ஏன்? தடுக்கும் முறைகள் என்ன? இனி இவற்றை செய்துபாருங்கள்!

0
6004

அந்தரங்க உறுப்பில் சிறு புண்கள், அரிப்பு, எரிச்சல்

சிறுகுழந்தை முதல் வயதான பெண்கள் வரை அனைவரும் முகங்கொடுக்கும் பிரச்சனையான அந்தரங்க உறுப்பு பகுதியில் ஏற்படுகின்ற ஒருவித தொற்று மூலமான அரிப்பு, எரிச்சல், சிவந்து போதல் மற்றும் தோல் பிய்ந்து காணப்படுதல் ஆகிய வல்வோவஜினிட்டிஸ் பாதிப்புக்கான காரணங்களையும அதற்கான எளிய தீர்வுகளினையும் நோக்குவது அவசியமாக உள்ளது.

காரணங்கள்….

பூஞ்சை, வைரஸ், பாக்டீரியா, பாராசைட் போன்ற எந்தவொரு தொற்றின் மூலமாகவும் ஏற்படக் கூடிய இது பொதுவாக கெமிக்கல் கலந்த வாசனைத் திரவங்கள் ஜபெர்ஃப்யூம்ஸ் அந்தரங்க உறுப்புகளுக்கான வாசனை ஸ்பிரே, சோப், வெஜைனல் ஆகியனவற்றைப் பயன்படுத்துபவர்களுக்கும், குளிப்பதற்கு பாத்டபினைப் பயன்படுத்துபவர்களுக்கும் சாதாரணமாக வரக்கூடிய ஒன்றாக காணப்படுவது மட்டுமன்றி, உடல் உறவுக்கு முன்பும், பின்பும் கருத்தரிப்பதை தவிர்ப்பதற்காக விந்தணுக் கொல்லி பயன்படுத்துகின்ற பெண்களுக்கும், பொதுவாக பெண்களுக்கு மலத்துவாரமும் சிறுநீர்த்துவாரமும் அருகருகே அமைந்துள்ளதனால்;, சரியாக சுத்தம் செய்ய தவறும் பட்சத்தில், இத்தகைய கிருமித்தொற்றுக்கள் இலகுவாக ஏற்பட்டுவிடுகின்றன.

மேலும், மாதவிடாய் காலத்தில், பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் ஹார்மோன் மாற்றங்களினால், மெனோபாஸ் நிறைவு பெற்றதும், அந்தரங்க உறுப்புக்கு வழுவழுப்புத் தன்மையைக் கொடுக்கக் கூடிய ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் சுரப்பிவும் குறைவடைந்து உறுப்பில் வறட்சி ஏற்பட்டு அரிப்பும் எரிச்சலும் ஏற்படுகின்றது. பெருமளவான பெண்களுக்கு மாதத்தின் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் அந்தரங்க உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் ஏற்படுவதுண்டு. இதற்கான காரணங்களை நோக்கின்:

உடலில் ஏற்படக்கூடிய பி.ஹெச். அளவு மாற்றங்கள்.

உடல் உ ற வுக்குப் பின்னர் பரவுகின்ற கிருமித் தொற்று என்பது மிகவும் சதாரண ஒன்றாக காணப்படுவதுடன், மிகவும் இறுக்கமானதும், வியர்வையை உறிஞ்சாததுமான உள்ளாடைகளை அணிதல் மற்றும் சுய சுகாதாரமின்மை, சுத்தம் செய்யாத மலசல கூடத்தினைப் பயன்படுத்துதல்;, சுத்தம் செய்வதற்கு தண்ணீரைத் தவித்து, டிஷ்யூ பயன்படுத்தும் போது முழுமையான சுத்தம் செய்யாது விடுதல் போன்றனவற்றினால்; கிருமித்தொற்றுகள் இலகுவாக ஏற்பட்டு விடுகின்றன.

மேலும், நமது உடலில் வாய், மூக்கு காது என அனைத்து உறுப்புகளிலும் பாக்டீரியாக்களகாணப்படுகின்றதுடன், பொதுவாக அவற்றில் பெரும்பாலானவை இயற்கையாகவே நமது உடலைப் பாதுகாக்கக் கூடிணனவானக காணப்படுகின்ற போதிலும், உடலில் ஏற்படும் குறிப்பிட்ட ஒரு உபாதைக்காக நாம் ஆன்ட்டிபயாடிக்கினை எடுத்துக் கொள்ளும் போது,அது நல்ல பாக்டீரியாக்களை தாக்கி எளிப்பதன் காரணமாக கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இன்னும், பொதுவாக கருத்தரிக்கும் காலத்தில் இலகுவாக விந்தணுக்களை ஏற்றுக் கொள்ளுவதற்கு ஏற்ற வகையில் பெண்ணின் உடலில் காரத்தன்மை அதிகளவில் காணப்படுகின்ற அதேவேளை கரு தோன்றிய பின்னர் ஏற்கனவே உருவான கரு பாதிப்படையாமல் இருப்பதற்காக அமிலத்தன்மை கொண்டதாக மாறிவிடுகின்றது. இந்த காலகட்டத்தில் தான் பொதுவாக பெண்களின் உடலில் கிருமித் தொற்றுக்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இதனைவிட, பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்படும் சிறுமிகளுக்கும் இந்தப் பிரச்சினை பரவலாக காணப்படுவதுடன், 35 வயதுக்கு உட்பட்டவர்கள் மற்றும் நடுத்தர வயதினருக்கு நீரிழிவு நோய் அல்லது தைராய்டின் அறிகுறியாகவோ கூட இருக்க முடியும்.

அறிகுறிகள்;

கிருமித்தொற்றின் போது பொதுவாக வெள்ளை படுதல், அரிப்பு, நமச்சல், எரிச்சல் என்பனவற்றுடன், உறுப்பில் சிறுநீரோ, தண்ணீரோ பட்டால் எரிச்சல் உண்டாகுதல், கிருமியின் தாக்குதல், இதன் தீவிரம் ஆகியவற்றைப் பொறுத்து வெள்ளைப் போக்கின் தன்மையும் வேறுபடுதல், அதாவது நீர்த்த தண்ணீர் போலவோ அல்லது திரிந்த தயிர் போல மஞ்சள் நிறத்துடனான வெள்ளைப் போக்கும் ஏற்படுவதுடன், கிருமித் தொற்றின் காரணமாக ஒருவிதமான அசுத்தமான வாடை மற்றும் சிலருக்கு காய்ச்சல், குளிர் காய்ச்சல் போன்றவையும் காணப்படலாம்.

பரிசோதனை முறைகள்..

முதலில் மருத்துவரிடம் கலந்து பேசி தேவைப்படின் வெள்ளைப் போக்கில் சிறிதளவினை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி, அதில் ஏற்பட்டுள்ள கிருமி தாககத்தின் வகையினைக் கண்டறிந்து அதற்குரிய மருந்துகளைச் செய்தல் வேண்டும்.

கவனிக்க செய்ய கூடாதவை…

பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியை முழுவதும் சேவிங் செய்யக்கூடாது.

பல பெண்கள் ரோமம் இல்லாத சருமத்தின் மீதுள்ள மோகத்தினால், கை, கால், அக்குள்களில் மட்டுமின்றி, தனது சருமத்திற்கு பாதுகாப்பை அளிக்கக் கூடிய பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியையும் நீக்கிவிடுகின்றனர். இவ்வாறாக அந்தரங்க முடியை ஷேவ் செய்வது, ட்ரிம் செய்வது, வேக்ஸ் செய்வது போன்ற பல வழிகளில் வலியற்ற வழியாக உள்ளதனால் ஷேவிங் முறையையே அதிகளவானோர் தெரிவுசெய்கின்றனர், இவ்வாறாக அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்த பின்னர் ஏற்படக் கூடிய அரிப்பானது மெல்லமெல்ல அதிகரித்து ஒரு நோயாக கூட மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் காணப்படுகின்றன.

இவ்வாறாக நமது உடலில் மிகவும் மென்மையான பகுதியான பிறப்புறுப்பில் வளரும் முடியை ஷேவிங் செய்வதனை தவிர்க்க வேண்டியதற்கான மிகமுக்கியமான காரணங்களாக, பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடியானது, அப்பகுதிக்கு நல்ல குஷன் போன்று காணப்படுவதுடன், தீவிரமான உடலுறவின் போது உராய்வு ஏற்படுவதனையும் தடுக்கின்றது. மேலும், அந்தரங்கப் பகுதியை ஷேவிங் செய்யும் போது, அதன் வடிவம் மற்றும் நிலையினால் பல காயங்கள் ஏற்படுவதுடன், ஷேவிங் செய்த பின்னர்; கடுமையான அரிப்புக்கள் கூட ஏற்படலாம்.

மேலும், பெண் பாலுறுப்பின் மென் திசுக்களில் இயல்பாக இருக்கும் நல்ல கிருமிகள் அழிந்து, அங்கு நோயைப் பரப்பும் தீய கிருமிகள் பரவிவிடக் கூடிய சாத்தியங்கள் பெருமளவில் காணப்படுவதனால், உடலுறவின் பின்னரும் மாதவிடாய் காலங்களிலுத் உறுப்பைச் சுத்தமாக பேணுவதற்காக நீரை உள்ளுக்குள் அடித்துச் சுத்தப்படுத்துவதனைத் தவிர்ப்பதுடன், டம்புன்ஸ் (Tampons) இனை உள்ளே வைக்கும் முறையினைத் தவிர்த்தல் நல்லது.

தீர்வுகள்…

டியோடரன்ட், ஸ்பிரே போன்றவற்றை பயண்படுத்துவதனைத் தவிர்த்தல், லூசுசான தளர்வான, காட்டன் உள்ளாடைகள் தேர்வு செய்து அணிதல்; பிறப்புறுப்பு பகுதியில் வளரும் முடி தேவையற்றது என்று கருதின் அதனை ட்ரிம் செய்து கொள்ளதல்; மெனோபாஸ் வயதுப் பெண்கள் மருத்துவ ஆலோசனையின் பேரில் அவசியம் என்றால் ஈஸ்ட்ரோஜென் க்ரீம் எடுத்துக் கொள்ளதல் மற்றும் மலசலகூடத்தை முறையாக சுத்தம் செய்வதற்கு சிறு வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்குப் பழக்க படுத்துதல்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: