தொப்புளில் அழுக்கு சேர்ந்து இருந்தால் எத்தனை மோசமான விளைவுகள் வரும் தெரியுமா?

0
747

காலையில் எழுந்ததும் நமது உடலை தூய்மைப்படுதிக்கொள்ள‍ குளிக்கிறோம். அதேபோல் இரவிலும் நாம் குளிக்கிறோம். ஆனால் நாம் குளிக்கு ம்போது நமது தொப்புளை சுத்தம் செய்கிறோமா என்றால் அதுமிகப் பெரிய கேள்விக்குறிதான். ஏனென்றால், இன்றைய அவசரயுகத்தில் ஏதோ உடலுக்கு சோப்புபோட்டோமா, தண்ணீர் ஊற்றிக் கொண்டு உடலை நனைத்தோமா இல்லாமல் தொப்புளை சுத்த‍ம்செய்ய யாருக்கு நேரமிருக்கு என்று நினைக்காமல் நமது தொப்புளை அதிலும் பெண்கள், தங்களது தொப்புளை சுத்த‍மாக வைத்திருக்க‍ வேண்டியது அவசியத்தின் அவசியமாகவே கருதப்படுகிறது.

குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து சுத்தப்படுத்துவதுபோல் தொப்புள் பகுதியையும் சுத்த‍ம் செய்தால் அது சுத்தமாவதில்லை. ஏனென்றால், அது வயிற்றுப்பகுதியில் ஒரு குழியாக இருப்பதால், அங்கு எளிதாக அழுக்கு தஞ்சம் அடைந்து விடுகிறது. இதனை நீங்கள் கவனிக்காமல் விட்டு விட்டால் உங்க தொப்புளுக்குள் கட்டிகள் ஏற்பட்டு அது புண்கள் ஏற்பட்டு அதன் மூலம் பல வியாதிகள் பரவ‌வும் வாய்ப்புள்ளது.

காயங்கள்:

சிலர்தொப்புளுக்குள் கிடக்கும் அழுக்கை சுத்தம் செய்வதாக நினைத்து நகத்தால் சுரண்டி எடுப்பார்கள். இவ்வாறு சுரண்டி எடுக்கும்போது சின்ன நகக்கீறல்கள் ஏற்பட்டு, அதன்மூலம் மிகவும் மெல்லிய ரத்த‍க் கசிவு ஏற்பட்டால், அங்கே பாக்டீரியா எளிதாக‌ தொற்றிக்கொண்டு புண் மற்றும் சீழ் கட்டி ஏற்பட்டுவிட வாய்ப்புகள் அதிகம். தொப்புள் பகுதியில் புண் ஏற்பட்டால் அது ஆறுவதற்கு வெகுநாட்கள் ஆகும். காரணம், புண் ஏற்பட்ட பிறகு தொப்புளை சுத்தம் செய்வதும் அந்த இடத்தில் வியர்வை படாமல் பாதுகாப்பதும் மிக மிகக் கடினம்.

பஞ்சுகள்:

காதை சுத்தம் செய்ய உதவும், இயர் பட்ஸை எடுத்து அதை சிறிதளவு பேபி ஆயில் அல்லது தண்ணீரில் நனைத்துக் கொள்ள வேண்டும். இந்த இயர் பட்ஸை கொண்டு தொப்புளை சுத்தம் செய்ய வேண்டும்.

கவனமாக தேய்க்க வேண்டும். மிகவும் அழுத்தமாக தேய்க்க கூடாது. அதன் பின்னர் மற்றொரு காட்டனை எடுத்து தொப்புளில் எஞ்சி இருக்கும், பேபி ஆயில் அல்லது தண்ணீரை சுத்தமாக துடைத்து எடுத்துவிட வேண்டும்.

உப்பு நீர்:

சிறிதளவு மிதமான சூடுள்ள தண்ணீரில், சிறதளவு உப்பை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த நீரில் பஞ்சை நனைத்து, தொப்புளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின்னர் தொப்புளை உலர்ந்த ஒரு இயர் பட்ஸினால் சுத்தம் செய்ய வேண்டும்.

தேங்காய் எண்ணெய்:

சில சமயம் தொப்புளில் நிறைய அழுக்குகள் இருந்தால், எளிதாக சுத்தம் செய்ய முடியாது. அதற்காக நீங்கள் தேங்காய் எண்ணெய்யை மிதமாக சூடு செய்து கொள்ள வேண்டும். இதனை தொப்புளில் தடவி, கடிகார முள் திசையிலும், கடிகார முள்ளுக்கு எதிர்திசையிலும் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் தொப்புளில் உள்ள அழுக்குகள் சீக்கிரமாக அகன்றுவிடும். பின்னர் ஒரு சுத்தமான பஞ்சை வைத்து தொப்புளை துடைத்து விட வேண்டும்.

மாய்சுரைசர்:

உங்களது தொப்புளை சுற்றியுள்ள பகுதிகளை நீங்கள் ஈரப்பதத்துடன் வைத்திருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். எனவே தொப்புளை சுற்றியுள்ள பகுதிகளில் நீங்கள் மாய்சுரைசர் தடவ வேண்டியது அவசியமாகும். இதனால் தொப்புள் பகுதிகளில் அரிப்புகள் உண்டாவதை தடுக்கலாம்.

ஷாம்பு:

தினமும் குளிக்கும்போதே நகம் இல்லாத விரலால் தொப்புளுக்குள் கொஞ்சம் சோப்பு போட்டு மென்மையாக சுத்தம் செய்யலாம்.

பல நாட்கள் கவனிக்காமல் விட்டதால் தொப்புளில் அதிக அழுக்குகள் சேர்ந்து விட்டதை உணர்கிறீர்களா? தலைக்குப் போடுகிற ஷாம்புவை தண்ணீரில் கரைத்து தொப்புளில் ஊற்றி சிறிது நேரம் ஊற வைத்து பஞ்சால் துடைத்து விட்டால் அழுக்குகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

மேலும் நீங்கள் தொப்புளை சுத்தம் செய்யாவிட்டால் என்னவாகும் என்பதை பற்றி தொடந்து காணலாம்.

விளைவு 1:

உங்களது தொப்புளில் 65 வகையிலான பாக்டீரியாக்கள் வாழ்கின்றன. இந்த பாக்டீரியாக்கள் நீங்கள் பயன்படுத்தும் சோப்புகள், வியர்வை அல்லது இறந்த செல்களின் மூலமாக உருவாகலாம்.

விளைவு 2:

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருக்குமே தொப்புளை சுத்தமாக வைக்கவில்லை என்றால் ஈஸ்ட் தொற்றுகள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக உண்டு. தாய்க்கு கர்ப்ப காலத்தில் இந்த ஈஸ்ட் தொற்றுகள் இருந்தால் குழந்தைக்கும் இது தொற்ற வாய்ப்புகள் உள்ளது.

விளைவு 3:

தொப்புளில் உங்களுக்கு தொற்றுகள் ஏற்ப்பட்டிருப்பதை எப்படி தெரிந்துகொள்வது என்று கேட்கிறீர்களா? தொப்புளில் தொற்றுகள் ஏற்பட்டிருந்தால், அரிப்புகள், கொட்ட துர்நாற்றம், வலி போன்றவை உண்டாகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: