தொடையில் அசிங்கமான கொழுப்பு கட்டியா?

0
520

ஒவ்வொரு வயதிலும் நம் உடலில் ஒவ்வொரு விதமான மாற்றம் ஏற்படும். அந்த வகையில் பருவம் அடைந்த பின் சிலருக்கு செல்லுலைட் எனும் கொழுப்பு கட்டிகள் தொடை, வயிறு மற்றும் பின்புறத்தில் சிறு சிறு திட்டுகள் போன்று தோன்றக் கூடும்.

இந்த கொழுப்பு கட்டிகள் குறிப்பிட்ட அளவை விட அதிகரித்தால், தோலில் சுருக்கம் மற்றும் குழிகளை உண்டாக்கி சரும அழகையே கெடுத்துவிடும்.

தொடையில் கொழுப்புக் கட்டி ஏற்படுவது ஏன்?
ஹார்மோன் சமச்சீரின்மை, உணவுப் பழக்கம், குறைந்த ரத்த ஓட்டம் அல்லது நிணநீர் ஓட்டம் போன்றவை காரணமாக செல்லுலைட் கொழுப்புக் கட்டிகள் உருவாகலாம்.

கொழுப்பு கட்டியை போக்கும் வழி?
சருமத்தை நன்றாக கழுவி காய வைத்து ப்ரஷ் கொண்டு கீழிருந்து மேலாக மென்மையாக 10 நிமிடங்கள் தொடர்ந்து தேய்த்து, வெந்நீர் கொண்டு குளிக்க வேண்டும்.

4 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயிலில் சிறிதளவு சர்க்கரை, ½ கப் காபி தூள் ஆகியவற்றை கலந்து அதை சருமத்தில் சூழல் வடிவில் தேய்த்து 5 நிமிடங்கள் மசாஜ் செய்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

1 ஸ்பூன் தேனுடன் 4 ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரை கலந்து அதை சருமத்தில் தடவி 5 நிமிடங்கள் நன்றாக மசாஜ் செய்து வெந்நீரில் கழுவ வேண்டும்.

தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதுடன், அதிக உடல் உழைப்பில் ஈடுபட்டால் செல்லுலைட் கொழுப்புக் கட்டிகள் விரைவில் குறையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: