ஸ்டெம் செல் மூலம் இயற்கையாகவே தோல் வளர்க்க முடியும் என்று நிரூபிக்கப்பட்டு உள்ளது.ஈஎஸ்சி எனப்படும் செயற்கை மாற்றம் செய்யப்பட்ட ஸ்டெம்செல்கள் தோல் பகுதியான எபிடெர்மிஸ் போல வளர்கிறது. இந்த முறையில் 40 நாட்களில் இயற்கையான தோல் பகுதி உருவாகிவிடுகிறது.
பிரான்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வகத்தில் எலிகளில் இந்த ஈஎஸ்சி செல்கள் மூலம் இயல்பான தோல் பகுதியை வளர்த்து சாதனை படைத்தனர்.
இந்த தோல் இயல்பான தோல் போலவே ரத்த ஓட்டம், வளர்ச்சிதை மாற்றம் போன்ற செயல்களில் பங்கெடுக்கிறது.
ஈஎஸ்சி செல்கள் இயல்பான செல்களை விட 3 மடங்கு வேகமாக வளர்ந்து தோல் உருவாகிவிடுவதன் இதன் சிறப்பம்சமாகும்.
விபத்து, தீக்காயங்களால் உடலில் தோலை இழந்தவர்கள், இந்த சிகிச்சை முறையில் புதிதாக சருமத்தைப் பெறலாம் என்கிறது அறிவியல்.