தேவாலயத்தில் தூக்கில் சடலமாக தொங்கிய 37 வயது பாதிரியார்! உடன் வசித்தவர்கள் வெளியிட்ட முக்கிய தகவல் !

0
458

சென்னையில் தேவாலயத்தில் தங்கியிருந்த பாதிரியார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வியாசர்பாடியில் அமைந்துள்ளது புனித அந்தோணியார் தேவாலயம்.

இங்கு மார்ட்டின் சவுரியப்பன் (37) என்பவர் பாதிரியராக பணிபுரிந்து வருவதோடு சென்னை பல்கலைக்கழகத்தில் பட்ட மேற்படிப்பும் படித்து வருகிறார்.

இவர் தேவாலயத்தில் உள்ள ஒரு அறையில் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல தனது அறைக்குச் சென்ற மார்டின் இன்று காலை சர்ச்சில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ளவில்லை. இதனால் சந்தேகமடைந்த மற்ற பாதிரியார்கள் மார்டினின் அறைக்கு சென்று பார்த்தனர்.

அங்கு உள்பக்கமாக அவரது அறையின் கதவு தாழிடப்பட்டு இருந்தது.

வேறு ஒரு சாவியை வைத்து அறையை திறந்து பார்த்த போது அங்குள்ள மின் விசிறியில் மார்டின் சடலமாக இருந்தார்.

இதுகுறித்து பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் மார்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கடந்த ஒரு வாரமாகவே மார்டின் அனைவரிடமும் சகஜமாக பேசாமல் மனச்சோர்வுடன் இருந்ததாகவும் எதனால் இந்த முடிவுக்கு வந்தார் என தெரியவில்லை எனவும் அவருடன் பழகியவர்கள் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஎதிர்வரும் ஜனவரியில் எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரிக்கவுள்ள அரச ஊழியர்களின் சம்பளம் !
Next articleபிக் பாஸ் வில்லி வனிதாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்! தீயாய் பரவும் தகவல்.. ஒரே குஷியில் ரசிகர்கள் !