தேனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் !

0
1030

தேனை எதற்கெல்லாம் பயன்படுத்தலாம் தெரியுமா? நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும் !

இயற்கையின் கொடையில் கிடைக்கும் தேனை எதற்காக பயன்படுத்தலாம்? என்ன பயன் கிடைக்கும் என்பதை பார்க்கலாம்

தேனை சருமத்திற்கு பயன்படுத்தினால் சருமத்தின் ஈரப்பதமானது தக்க வைக்கும்.இதனால், சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சுருக்கம் ஏற்படாமலும் தேன் காக்கும்.

தேனை உதட்டில தடவினால், சுருக்கம், வெடிப்பு போன்றவை ஏற்படாமல் மிருதுவானதாக இருக்கும்.

தினமும் தேனை சாப்பிட்டு வந்தால், ஹீமோகுளோகின் எண்ணிக்கையை அதிகப்படுத்து, இரத்தசோகை நோயையே விரட்டிடலாம்.

தேனானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்புக்களை கரைத்து, உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பை அதிகப்படுத்துகிறது.

தேனில் சளி நீக்கும் பண்பு மற்றும் சுவாசக் குழாயில் இருக்கும் நோய்த்தொற்றுகளை சரிசெய்யும். எனவே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

தேனில் நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது அதை நிச்சயம் தினமும் பயன்படுத்தலாம்.

குர் ஆனில் தேனைப்பற்றி, ”அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.

நபி( சல்) அவர்களும் தேனை எவ்வளவு விரும்பியுள்ளார் என்பதும் அதன் மருத்துவ பலன்களைப் பற்றி எவ்வாறு சிலாகித்துக் கூறியுள்ளனர் என்பதும் நாம் அறியவேண்டிய முக்கியமான விஷயம்.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் வலு பெறும்.

பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ரோஜா பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

குர் ஆனில் தேனைப்பற்றி, ”அதில் மனிதர்களுக்கு நிவாரணம் உண்டு” என்று கூறப்பட்டுள்ளது.நபி( சல்) அவர்களும் தேனை எவ்வளவு விரும்பியுள்ளார் என்பதும் அதன் மருத்துவ பலன்களைப் பற்றி எவ்வாறு சிலாகித்துக் கூறியுள்ளனர் என்பதும் நாம் அறியவேண்டிய முக்கியமான விஷயம்.

பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிட நல்ல தூக்கம் வரும், இதயம் வலு பெறும். பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உ ண்டாகும்.

மாதுளம் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும்.

எலுமிச்சை பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் நீங்கும்.

நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும்.

ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

ரோஜா பூ குல்கந்தில் தேன் கலந்து சாப்பிட்டால் உடல் சூடு குறையும்.

தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண், வாய்ப்புண்கள் ஆறும்.

இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பித்தம் தீரும்.

கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த் சோகை போகும்.

தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும்.

தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால், அது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடித்து வர வேண்டும்.

தேனின் பயன் அறிந்தே, நமது ஆயுர்வேத வைத்தியத்திலும் சித்த வைத்தியத்திலும் பல சூரணங்களைத் தேனில் குழைத்து உண்ணத் மருத்துவர்கள் தருகிறார்கள். தேனை உண்டால் பசியும் ருசியும் உண்டாவதோடு. நல்ல உறக்கமும் ஏற்படுகிறது.

வாய்வுத் தொல்லையில் இருந்து நீங்குவதோடு, வயிற்று உப்புசம் குறைந்து, ஒருவித புத்துணர்வு கிடைப்பதை உணரலாம். நோய்களை உண்டாக்கும் பாக்டீரியாக்களை அழித்து, நோயெதிர்ப்பு மண்டலத்தின் சக்தி மற்றும் வலிமையை அதிகரிக்கச் செய்யும்.

உடல் பருத்தவருக்கும், உடல் இளைத்தவருக்கும் தேனே சிறந்த மருந்தாக உள்ளது. உடல் பருமனானவர்கள் தினமும் வெந்நீரில் இரண்டு தேக்கரண்டி விட்டு அருந்திவர, உடலிலுள்ள ஊளைச்சதை குறையும் பலம் அதிகரிக்கும்.

உடலின் மூலை முடுக்குகளில் தங்கியுள்ள டாக்ஸின்கள் அனைத்தும் சிறுநீர் பெருக்கத்தின் மூலம் முழுமையாக வெளியேற்றப்படும். உடலில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி, சருமத்தை பாக்டீரியாக்களின் தாக்குதல்களில் இருந்து பாதுகாத்து, பொலிவான சருமத்தைப் பெற உதவுகிறது.

உடல் மெலிந்தவர்கள் இரவு உணவிற்குப் பின், ஒரு கப் பசும்பாலில் இரண்டு தேக்கரண்டி தேனை விட்டு அருந்திவர, உடல் பருமன் கிட்டும், ஆயுளும் நீடிக்கும்.

தேன் பருகுவதன் மூலம் பல தொற்று நோய்கள், மலேரியா, அம்மை போன்ற நோய்களை வரமால் தடுக்கலாம். பேரீச்சம்பழத்தைக் தேனில் ஊற வைத்து உண்பதால் நல்ல இரும்புச்சத்தோடு. தேனிலுள்ள சத்துக்களும் கிடைக்கும் அதுபோல், ரோஜா மலரிலுள்ள இதழ்களை தேனில் ஊறவைத்து உண்பதால், உடலுக்குபலமும், குளிர்ச்சியும், தாதுவிருத்தியும் உண்டாகும்.

ஒரு கண்ணாடி டம்ளரில் நிறைய தண்ணீரை எடுத்துக்கொண்டு அதில் ஒரு சொட்டு தேனை விடவும் தேன் தண்ணீரில் கரையாமல் அப்படியே அடியில் சென்றால் அது சுத்தமான தேன் என்பதனை கண்டறியலாம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇவற்றை இரத்தக்கட்டு, கை, கால் சுளுக்கு, நோவு உள்ள இடத்தில் தினந்தோறும் தடவி வந்தால் குணம் கிடைக்கும் !
Next articleமூக்கின் மேல் ஒரு கண் வைங்க ! சைனஸ் பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக விடுபட சிகிச்சை முறைகள் !