தெலுங்கில் சமந்தா இடத்தை பிடித்த அமலாபால் !

0

அமலாபால் நடித்த ஆடை திரைப்படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது அவர் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்

சமீபத்தில் சமந்தா நடிப்பில் பெண் இயக்குனர் நந்தினி ரெட்டி இயக்கத்தில் வெளியான ’ஓ பேபி’ திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் நந்தினி ரெட்டி இயக்கும் அடுத்த படத்திலும் சமந்தா நடிப்பார் என கருதப்பட்டது. இது குறித்த ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையும் நடந்ததாக செய்திகள் வெளிவந்தது

இந்த நிலையில் இயக்குனர் நந்தினி ரெட்டியின் அடுத்த படத்தில் நடிக்க அமலாபால் ஒப்பந்தமாகியுள்ளார். பாலிவுட்டில் கடந்த ஆண்டு வெளியான ’லஸ் ஸ்டோரிஸ் என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தை நந்தினி ரெட்டி உள்பட 4 இயக்குனர்கள் இயக்க உள்ளனர்.

லஸ்ட் ஸ்டோரிஸ் படத்தில் நான்கு கதைகள் இருக்கும். நான்கு கதைகளையும் நான்கு இயக்குனர்கள் இயக்குவார்கள். இந்த நிலையில் அதில் ஒரு கதையை நந்தினி ரெட்டி இயக்க அதில் நடிகை அமலாபால் நடிக்கவுள்ளர். மற்ற மூன்று கதைகளை தருண்பாஸ்கர், சந்தீப் வங்கா மற்றும் சங்கால்ப் ரெட்டி ஆகியோர் இயக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

லஸ்ட் ஸ்டோரீஸ் திரைப்படத்தில் உள்ள நான்கு கதைகளின் நாயகிகளும் கிளைமாக்ஸில் ஒரு புள்ளியில் இணைவது தான் கதை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்திற்கு பின் அமலாபால், தெலுங்கிலும் பிரபலமாவார் என எதிர்பார்க்கப்படுகிறது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசிக்கலுக்குள் மாட்டிக்கொண்டாரா நடிகை யாஷிகா !
Next articleசித்தர்கள் சாப்பிட்டு பல ஆண்டுகாலம் உயிர்வாழ்ந்த வாழை இலை துவையல் ! எப்படி செய்வது?