Home thatstamil one india tamil oneindia tamil vilayattu seithigal தெற்காசிய பூப்பந்து! புதுகை வீரருக்கு தங்கம்!

தெற்காசிய பூப்பந்து! புதுகை வீரருக்கு தங்கம்!

0
908

பூடான் நாட்டில் அண்மையில் நடைபெற்ற தெற்காசிய அளவிலான பூப்பந்தாட்ட போட்டியில் இந்தியா சார்பில் விளையாடிய புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரர் தங்கம் வென்றார்.

இப்போட்டிகள் கடந்த 2-ம் தேதி முதல் 4-ம் தேதி வரை நடைபெற்றன. இப்போட்டியில், மூத்தோர் ஒற்றையர் பிரிவு பூப்பந்தாட்டப் போட்டியில் இந்தியா சார்பில் கலந்துகொண்ட புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே உள்ள முத்துக்குடா கிராமத்தைச் சேர்ந்த எம்.ஜனகன்(24), பூடான் நாட்டு வீரரை 21-19, 17-21, 22-20புள்ளிக் கணக்கில் வென்று, தங்கம் பெற்றார்.

இதையடுத்து, 2 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்த ஜனகனுக்கு புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர்.

Previous articleஆபாச ‘டிக்டாக்’ மோகம்! உஷார் பெண்களே!
Next articleபிரபல நிறுவனத்தில் ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்த நூடுல்ஸ்! என்ன இருந்தது தெரியுமா!