தூக்குத் தண்டனைக் கைதிகள் பட்டியல் -நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு!!

0
327

தூக்குத் தண்டனைக் கைதிகள் பட்டியல் -நீதி அமைச்சிடம் ஒப்படைப்பு!!

போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தூக்குத் தண்டனையை வழங்கப்பட்டுள்ள கைதிகளின் பெயர்ப் பட்டியல் நீதி மற்றும் மறுசீரமைப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 18 கைதிகளுக்கு போதைப்பொருள் வர்த்தகம் தொடர்பில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அலுகோசு (கைதிகளைத் தூக்கில் இடுபவர்) பதவிகளுக்காக விண்ணப்பங்களை கோருவதற்கு அடுத்த வாரம் முதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்று சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனிய தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: