தூக்கில் தொங்கிய மனைவி! பொலிசார் வீட்டில் நடந்த கொடுமை!

0
245

சென்னையில் பொலிஸ்காரர் ஒருவரின் மனைவி வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலலி செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையை சேர்ந்தவர் விக்னேஷ்(25), அவர் சென்னை பெருநகர பொலிஸ் ஆயுதபடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் லட்சுமி (24) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் குடும்பத்துடன் சென்னையில் வாடகை வீட்டில் வசித்து வந்த விக்னேஷ் நேற்று காலை பணிக்கு சென்றார். பின் வீடு திரும்பிய அவர், வீட்டின் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவி திறக்கப்படாததால், விக்னேஷ் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது மனைவி லட்சுமி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

லட்சுமியின் தந்தை தனது மகள் வரதட்சணை கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதால் தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார் என கண்ணீர் மல்க கூறினார். மேலும் இதுகுறித்து அவர் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: