மருத்துவ குறிப்புகள்! தூக்கமின்மை, சளி, இருமல், கட்டு, சுரம், வாதம் என்பவற்றிற்கான‌ தீர்வு!

0
1281

மருத்துவ குறிப்புகள்! தூக்கமின்மை, சளி, இருமல், கட்டு, சுரம், வாதம் என்பவற்றிற்கான தீர்வு!

• ஆஸ்துமா, மூச்சுத்திணறல் குணமாக:

முசுமுசுக்கை இலையை அரித்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட்டு வரும் போது ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் என்பன குணமடையும்.

• இருமல் குணமாக:

பனங்கிழங்கினை நன்கு அவித்து காயவைத்து இடித்து பொடியாக்கி அதனை பனங்கற்கண்டுடன் சேர்த்து சாப்பிட்டு வரும் போது ஜலதோஷம், காய்ச்சல் மற்றும் தலைவலி என்பன குணமடையும்.

• ஜலதோஷம் குணமாக:

முருங்கை பிஞ்சுகளை நசுக்கி சாறு பிளிந்து அதில் தேன் கலந்து தினமும் 2 வேளை வீதம் 3 நாட்கள் சாப்பிடடடு வரும் போது ஜலதோஷம் குணமடையும்.

• தலை சுற்றல் குணமாக:

சுக்கு, சீரகம,; மிளகு, விலாமிச்சை வேர் மற்றும் திப்பிலி ஆகியனவற்றை தலா 5 கிராம் வீதம் பவுடராக்கி தினசரி காலை, மாலை அரை கரண்டி சாப்பிட்டு வரும் போது தலை சுற்றல் குணமாகும்.

• தலைபாரம் குறைய:

நல்லெண்ணையில் தும்பை பூவை போட்டு நன்கு காய்ச்சி தலையில் தேய்த்து குளித்து வரும் போது தலைபாரம் குறையும்.

• வறட்டு இருமல் குணமாக:

கருவேலமரக் கொழுந்தை நன்கு கசக்கி சாறு பிளிந்து அதனை வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வரும் போது வறட்டு இருமல் குறைவடைவதுடன், வெள்ளை முதலான நோய்களும் குணமாகும்.

• மார்புச்சளி நீங்க:

ஏலக்காய் பொடியை நெய்யில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரும் போது மார்புச்சளி குணமாகும்.

• சளிகட்டு நீங்க:

தூதுவளை, சுக்கு, ஆடாதோடா, திப்பிலி சங்கன் இலை, மிளகு மற்றும் கண்டங்கத்திரி இலை என்பனவற்றைப் பயன்படுத்தி கஷாயம் செய்து சாப்பிடடடு வரும் போது இறைப்பு மற்றும் சளிகட்டு நீங்கும்.

• வாந்தி நிற்க:

காய்ச்சலின் போது துளசி சாற்றினை கல்கண்டுடன் சேர்த்து சாப்பிடும் போது வாந்தி நிற்கும்.

• குமட்டல்:

கசப்பான மருந்து உட்கொண்டவுடன் வெற்றிலை காம்பை வாயிலிட்டு சுவைத்தால் குமட்டல் ஏற்படாது.

• மூக்கடைப்பு நீங்க:

மூக்கடைப்பின் போது ரோஜா மலரை முகர்ந்தால் மூக்கடைப்பு நீங்கி விடும்.

மேலும் வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: