துலாம் ! ‘விளம்பி’ தமிழ்ப் புத்தாண்டு பலன்கள்! – எளிய பரிகாரங்களுடன்!

0
845

துலாம்

சித்திரை 3,4-ம் பாதம் சுவாதி, விசாகம் 1,2,3-ம் பாதம்

உங்கள் ராசிக்கு 6-ம் வீட்டில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால், உங்களை தலைநிமிர வைக்கும். சோகத்தில் மூழ்கியிருந்த உங்கள் மனதில் தன்னம்பிக்கை பிறக்கும். வீட்டில் சுபகாரியங்கள் ஏற்பாடாகும்.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் 3.10.2018 வரை உங்கள் ராசிக்குள்ளே குரு அமர்ந்து ஜன்ம குருவாக இருப்பதால், பழைய பிரச்னைகள் தலைதூக்கும். தேவையில்லாத பிரச்னைகள் தலைதூக்கும் என்பதால், மற்றவர்களை நம்பி பெரிய முயற்சிகளில் ஈடுபடாதீர்கள்.

4.10.18 முதல் 12.3.19 வரை குருபகவான் உங்கள் ராசியை விட்டு விலகி 2-ல் அமர்வதால், குடும்பத்தில் இதுவரையிலும் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். உங்கள் குடும்பத்தில் வீண் கலகத்தை ஏற்படுத்திவந்த ஏற்படுத்திய சுற்றத்தாரை இனங் கண்டறிந்து ஒதுக்குவீர்கள். புது வேலை அமையும். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வந்துசேரும்.

திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம், காது குத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். சிலருக்குக் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அரசாங்க விஷயம் சாதகமாக முடியும். மகனுக்கு உயர்கல்வி, உத்தியோகம் நல்லவிதத்தில் முடியும். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்து வீர்கள். அடகிலிருந்த நகையை மீட்பீர்கள். வீடு கட்ட வங்கிக்கடன் கிடைக்கும்.

13.3.19 முதல் வருடம் முடியும் வரை குருபகவான் அதிசார வக்ரமாகி 3-ம் வீட்டில் அமர்வதால் இலக்கை எட்டிப் பிடிக்க கடுமையாகப் போராட வேண்டி வரும். சுபச் செலவுகளும் திடீர் பயணங்களும் அதிகரிக்கும்.

14.4.18 முதல் 12.2.19 வரை ராசிக்கு 10-ல் ராகு நிற்பதால் வேலைச் சுமை, டென்ஷன் வரக்கூடும். ஆனால், உங்களின் ஆளுமைத் திறன் அதிகமாகும். கேது 4-ல் நிற்பதால் தாழ்வுமனப்பான்மை, பகைமை வரும். தாயாரின் உடல்நிலை பாதிக்கும்.

13.2.19 முதல் 9-ல் ராகு நுழைவதால், நீங்கள் எதிர்பார்த்தபடி பணவரவு திருப்திகரமாக இருக்கும். தந்தை வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்துபோகும். கேது 3-ம் வீட்டில் நுழைவதால், பூர்வீகச் சொத்துப் பிரச்னைகள் சுமுகமாக முடியும். வேற்று மொழி பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள்.

இந்தாண்டு முழுக்க சனிபகவான் 3-ம் வீட்டில் நிற்பதால் சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்கு வரும். பிரபலங்கள் பட்டியலில் இடம்பிடிப்பீர்கள். உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள்.

நகரின் எல்லையை ஒட்டியிருக்கும் பகுதியிலே நிலம், வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணரும் சூட்சும புத்தி உண்டாகும். வெளிநாட்டிலிருப்பவர்கள், வேற்று மாநிலத்தில் இருக்கும் நண்பர்களால் திடீர் திருப்பம் உண்டாகும்.

30.04.18 முதல் 27.10.18 வரை செவ்வாய், கேதுவுடன் சேர்ந்து 4-ல் நிற்பதால், தாழ்வுமனப்பான்மை நீங்கி தன்னம்பிக்கை பிறக்கும்.

நெருக்கமானவர்களுடன் மனவருத்தம், தாயாருக்கு மருத்துவச் செலவுகள், சொத்துத் தகராறுகள் வந்து செல்லும். உங்கள் ரசனைக்கேற்ப வீட்டை விரிவுப் படுத்திக் கட்டுவீர்கள்.

வியாபாரத்தில், ஆவணி, புரட்டாசி, ஐப்பசி மாதங்களில் இரட்டிப்பு லாபம் உண்டு. பற்று-வரவு உயரும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பெரிய நிறுவனங்களுடன் ஏற்படும் புதிய ஒப்பந்தங்களால் உங்கள் நிறுவனம் புகழ் பெறும். பங்குதாரரால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்வீர்கள். ஹார்டுவேர், ஹோட்டல், ஸ்பெக்குலேஷன், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபம் அடைவீர்கள்.

உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை அதிகரிக்கும். அலுவலகச் சூழ்நிலை உங்களுக்குச் சாதகமாக அமையும். மார்கழி, தை மாதங்களில் பதவி உயர்வுக் காக உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும்.

மொத்தத்தில் இந்தப் புத்தாண்டு உங்களின் நீண்ட கால கனவுகளை நனவாக்குவதுடன், அடுத்தடுத்து உங்களை சாதிக்கவைப்பதாக அமையும்.

பரிகாரம்

கோவை மாவட்டம், உக்கடம் எனும் ஊரில் கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீஹரிவரதராஜப் பெருமாளை, ஏதேனும் ஒரு சனிக்கிழமையில் வழிபட்டு வாருங்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

விருச்சிகம் : 2018- விளம்பி தமிழ்ப் புத்தாண்டு பலன்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்!

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: