துலாம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0

துலாம்: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

உங்கள் ராசிக்கு 3-வது வீட்டில் அமர்ந்து தைரியத்தையும் விடாமுயற்சியையும் தந்த சனி பகவான் சுக வீடான 4-வது வீட்டில் 27.12.2020 முதல் அமர்வதால் அர்த்தாஷ்டமச்சனியாச்சே என்றெல்லாம் பயப்படாதீர்கள். சனி பகவான் ஆட்சிபெற்று அமரப் போகிறார். அவர் 4-வது வீட்டுக்கு வந்தாலும் ஓரளவு நல்லதையே செய்வார். கெடுபலன்கள் குறையும். முடங்கிக்கிடந்த பல வேலைகளை இனி விரைந்து முடிப்பீர்கள். பழைய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். என்றாலும் உறவினர்களுடன் கணவருடன் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. மாமியார், மாமனாரிடம் அனுசரித்துச் செல்லுங்கள். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்து நீங்கும். பணவரவு அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகளை இனங்கண்டறிந்து ஒதுக்குவீர்கள். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களை நம்பி அனுபவமில்லாத துறையில் முதலீடு செய்ய வேண்டாம். வேலையாட்கள், பங்குதாரர்களிடம் கோபப்படுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உங்கள் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுவார்கள். சக ஊழியர்களை அரவணைத்துப் போங்கள். இந்த சனிப் பெயர்ச்சி நல்லது கெட்டது என்று அனைத்தையும் கற்றுத்தரும் பாடசாலையாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகன்னி சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !
Next articleவிருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !