துலாம்‌‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!

0

பொதுப்பலன்கள் : ராசிக்கு சமசப்தமமான 7 – ம் வீட்டில் இந்தப் பிலவ வருடம் பிறப்பதால், உங்களின் திறமைகள் வெளிப்படும். கெட்டவர்களிடமிருந்து விடுபடுவீர்கள். குடும்பத்தில் அமைதி உண்டாகும். வீண் கவலைகள் நீங்கும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். அவர்களின் விருப்பப்படி அயல்நாட்டுக்கு அனுப்பிப் படிக்க வைப்பீர்கள். மகன் அல்லது மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். கார்த்திகை மாதத்தில் இருந்து மன மகிழ்ச்சி உண்டு. சகோதர உறவுகளிடம் விட்டுக் கொடுத்துப் போவீர்கள். குழந்தை இல்லாத தம்பதிக்கு ஆவணி, புரட்டாசி மாதங்களில் குழந்தை பாக்கியம் உண்டாகும். உங்களைக் கண்டும் காணாமல் போய்க் கொண்டிருந்த உறவினர்கள் உங்களது உதவியை நாடி வருவார்கள்.

வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். தலை சுற்றல், கண் எரிச்சல், அசதி ஆகியன வந்து விலகும். வெளியே சாப்பிடுவதைத் தவிர்க்கவும். எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகளை ஒதுக்குங்கள். கீரை, பழ வகைகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள். பிரபலங்களின் நட்புறவு கிடைக்கும். புது முயற்சிகளில் தீவிரமாவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மார்கழி, தை மாதங்களில் அதிரடி மாற்றங்கள் ஏற்படும். வீடு, வாகன வசதிகள் பெருகும். தியானம், யோகா, இவற்றில் ஈடுபாடு அதிகரிக்கும்.

பொருளாதாரம் எப்படி இருக்கும் : பணத் தட்டுப்பாடு தீரும். அநாவசியச் செலவுகள் கட்டுக்கடங்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். பணவரவு சரளமாக இருக்கும். பூர்வீகச் சொத்தை சீர் செய்வீர்கள்.

குருபகவானின் பலன்கள் எவை : 14.4.21 முதல் 13.9.2021 வரை மற்றும் 13.11.2021 முதல் வருடம் முடியும்வரை குரு 5 – ல் நிற்பதால் அரைகுறையாக நின்று போன வேலைகளை வருடத்தின் மத்தியப் பகுதியில் இருந்து விரைவாக முடிப்பீர்கள். அயல் நாட்டில் வசிக்கும் உறவினர்கள் நண்பர்கள் உதவுவர். வீட்டில் ஒருவித போராட்டம் இருந்தாலும், வெளியில் வரவேற்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்குப் பொறுப்பு ஏற்பதையும், சாட்சிக் கையெழுத்து இடுவதையும் தவிர்க்கவும். ஆனால் 14.9.2021 முதல் 12.11.2021 வரை குரு உங்கள் ராசிக்கு 4 – ம் வீட்டில் அமர்வதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். வீடு கட்டும் பணி தாமதமாகும். தாயாரை தவறாகப் புரிந்துக் கொள்ளாதீர்கள். அவருக்கு ரத்த அழுத்தம், செரிமானக் கோளாறு, கை, கால் வலி வந்து போகும். பழைய பிரச்னைகள், சிக்கல்கள் மீண்டும் வந்துவிடுமோ என்றெல்லாம் பயப்படுவீர்கள்.

ராகு – கேதுபகவானின் பலன்கள் எவை : 14.4.21 முதல் 20.3.2022 வரை ராகு 8 லும் கேது 2 லும் நிற்பதால் குடும்பத்துக்குள் வீண் பிரச்னைகள் வரும். சந்தேகம் தலைதூக்கும். பேச்சால் பிரச்னைகள் வரக்கூடும். எனவே நிதானித்துப் பேசுவது நல்லது. கனவுத்தொல்லை, கழுத்துவலி வந்து நீங்கும். 21.3.2022 முதல் கேது ராசிக்குள் நுழைவதால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை, முன்கோபம் வந்து நீங்கும். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். அதிக அளவில் காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். ராகு 7-ல் நுழைவதால் வாழ்க்கைத் துணையில் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள்.

சனிபகவானின் பலன்கள் எவை : இந்த ஆண்டு முழுக்க சனி 4 – ம் வீட்டிலேயே நீடிப்பதால், வீடு கட்ட அரசாங்க அனுமதி தாமதமாகக் கிடைக்கும். மனை வாங்கும் போது வில்லஙகச் சான்றிதழ், தாய்ப்பத்திரத்தைச் சரி பார்த்து வாங்குவது நல்லது. வாகனத்தை இயக்கும்போதும், சாலையைக் கடக்கும் போதும் அலைபேசியில் பேச வேண்டாம். சின்னச் சின்ன விபத்துகள் நிகழக்கூடும். பழைய வாகனத்தை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது. அப்படி வாங்குவதாக இருந்தால் ஆவணத்தை சரி பார்த்து வாங்குங்கள். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வரக்கூடும்.

வியாபாரம் எப்படி இருக்கும் : சுறுசுறுப்பு அதிகரிக்கும். விற்பனை அமோகமாக நடைபெறும். பழைய சரக்குகளும் விற்றுப்பொகும். கொடுக்கல் – வாங்கலில் சுமுகமான நிலை காணப்படும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பார்கள். சொந்த இடத்துக்கு வியாபாரத்தை மாற்றுவீர்கள். பங்குதாரர்களின் ஆதரவு கிட்டும். இரும்பு, துணி, மர வகைகளால் எண்ணிக்கையை அதிகரிக்கப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். மறைமுகப் போட்டிகள் விலகும்.

உத்தியோகம் எப்படி இருக்கும் : புதிய பொறுப்புகள் தேடி வரும். மேலதிகாரியின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். சம்பள உயர்வுடன், பதவி உயர்வு தேடி வரும். வேலைச்சுமை குறையும். அரசாங்க ஊழியர்கள் வீண் பிரச்னை – வதந்தியிலிருந்து விடுபடுவார்கள். கலைஞர்கள் தங்களின் திறமைகளை மென்மேலும் வளர்த்துக் கொள்வார்கள்.

இந்தப் புத்தாண்டு தொலை நோக்குச் சிந்தனையாலும், வளைந்து கொடுத்துப் போவதாலும் வெற்றி பெற வைக்கும்.

பரிகாரம் என்ன : திருவள்ளூரில் அருள்பாலித்துக் கொண்டிருக்கும். ஸ்ரீவீரராகவப் பொருமாளை சனிக்கிழமைகளில் சென்று தரிசியுங்கள். அல்லது அருகில் இருக்கும் கோதண்ட ராமர் சந்நிதி உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபடுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகன்னி ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!
Next articleவிருச்சிக‌‌ ராசிக்காரர்களுக்கு இந்த‌ பிலவ வருட தமிழ்ப்புத்தாண்டு எப்படியான அதிர்ஷ்டம் தரப்போகிறது குருபகவான் தர இருக்கும் பலன்கள் மற்றும் பரிகாரங்கள்!