தீபாவளிக்கு பின்பு உங்களது அதிர்ஷ்டம் எப்படி? இந்த அறிகுறி வந்தால் செம்ம சூப்பராம்!

0

இந்தியர்களின் மிகமுக்கியமான பண்டிகை என்றால் அது தீபாவளிதான். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தியாவில் அனைவருமே ஆண்டு முழுவதும் காத்திருக்கும் ஒரு தருணம் என்றால் அது தீபாவளிதான். இந்துக்கள் மட்டுமின்றி அனைத்து மதத்தினரும் மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் கொண்டாடும் இந்த தீபாவளி வாழ்க்கையில் பல திருப்பங்களை கொண்டுவரும்.

உங்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் மற்றொரு நாள் போல இருக்காது. உங்கள் வாழ்க்கையை சிலநாட்கள் மட்டும் திருவிழாவாக மாற்றும் தீபாவளி உங்கள் வாழ்க்கையை மொத்தமாகவே திருவிழாவாக மாற்றக்கூடிய மாற்றங்களை உண்டாக்கும். அதுபோன்ற மாற்றங்கள் உங்கள் வாழ்வில் ஏற்படும் முன் சில அறிகுறிகள் தோன்றும். இந்த பதிவில் தீபாவளிக்கு முன் உங்கள் வாழ்வில் நல்ல மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்பதை உங்களுக்கு உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்.

அறிகுறிகள்
உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நல்லதும் சரி கெட்டதும் சரி அறிகுறிகள் இல்லாமல் ஏற்படாது. அதனை உணர்வதற்கு நீங்கள் செய்யவேண்டிய முக்கியமான காரியம் கவனமாக இருப்பது மட்டுமே. நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயல்களுக்கு முன்னும் அதன் முடிவு குறித்து முன்னரே உங்களுக்கு சில அறிகுறிகள் தெரியும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

தீபாவளி பூஜை
தீபாவளியன்று குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக சேர்ந்து மஹாலக்ஷ்மி மற்றும் விநாயகரின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெற பூஜை செய்வார்கள். இந்த நல்ல நாளில் மஹாலக்ஷ்மி மற்றும் விநாயகர் இருவரும் இதயம் முழுவதும் பக்தியுடனும், அர்ப்பணிப்புடனும் தங்களை வணங்குபவர்களுக்கு அவர்கள் விரும்பும் அனைத்தையும் வழங்குவார்கள் என்பது அனைவரின் நம்பிக்கையாகும். எனவே தீபாவளியன்று மறக்காமல் லக்ஷ்மியையும் – விநாயகரையும் மறக்காமல் வழிபடுங்கள்.

பணம் தவறி விழுவது எப்பொழுதும் நல்ல அறிகுறியாகும். பண பரிமாற்றத்தின் போது அடிக்கடி உங்கள் கையிலிருந்து பணம் நழுவுவது அது கனவில் இருந்தால் கூட உங்களுக்கு பணவரவு வரப்போகிறது என்பதன் அறிகுறியாகும். இந்த அறிகுறி உங்கள் பணம் மற்றும் சொத்து அதிகரிக்கப்போவதை உணர்த்தும்.
உங்கள் கை மற்றும் மார்பு பகுதியில் தொடர்ந்து அரிப்பு ஏற்பட்டால் அது நல்ல செய்தி வரபோவதற்கான அறிகுறியாகும். இந்த அறிகுறி உங்கள் செல்வச்செழிப்பு அதிகமாக கூடிய வாய்ப்பு வரப்போகிறது என்று அர்த்தம்.

உங்களுக்கு நடக்கப்போகும் நல்லதோ, கெட்டதோ முதலில் அதனை உங்களுக்கு உணர்த்துவது கனவுகள்தான். அதிலும் உங்கள் கனவில் உங்கள் மூதாதையர்கள் வருவது நல்ல அறிகுறியாகும், குறிப்பாக இது போன்ற சிறப்பான நாட்களில் உங்கள் முன்னோர்கள் வருவது சிறப்பானதாகும். இவ்வாறு நடந்தால் உங்கள் பரமபரை சொத்து தொடர்பான நல்ல செய்திகள் வரும்.

பொதுவாக 8 என்பது துரதிர்ஷ்டத்தின் எண் என்ற கருத்து உள்ளது. ஆனால் உண்மையில் 8 ஆம் எண்ணை தொடர்ச்சியாக பார்க்க நேர்ந்தால் அது நல்ல அறிகுறி ஆகும். திட்டமிட்டு பார்க்காமல் எதேர்ச்சையாக இந்த எண்ணை பார்த்தால் நிச்சயம் நல்ல செய்தி தேடிவர போகிறது என்று அர்த்தம். இந்த எண் மகாலக்ஷ்மியுடன் தொடர்புடையது.

பூச்சிகளை பார்ப்பது உங்களுக்கு பிடிக்காத ஒன்றாக இருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு நல்லது நடக்க போகிறது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியாகும். குறிப்பாக உங்கள் வீட்டுக்குள் எறும்புகள் ஊர்ந்து செல்வதை நீங்கள் பார்த்தால் கடவுள் உங்கள் நல்லது நடக்க போவதை உங்களுக்கு உணர்த்துகிறார் என்று புரிந்துகொள்ளுங்கள்.

சிலந்தி வலை என்பது உங்களுக்கு மிகப்பெரிய செல்வம் காத்திருக்கிறது என்பதற்கான அறிகுறி ஆகும். உங்கள் வீட்டில் ஏதேனும் ஒரு மூலையில் பலமான சிலந்தி வலை காண நேர்ந்தால் அது நல்ல செய்திக்கான அறிகுறி ஆகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஒருமுறை சமைக்க பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமைக்கலாமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க!
Next articleஇந்தோனேசியா விமான விபத்தில் 189 பேர் பலி? கண்ணீர் சிந்தும் உறவினர்கள்!