திருமாவளவனை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம் ! வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

0
579

திருமாவளவனை அவதூறாக பேசிய காயத்ரி ரகுராம்… வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு!

பிரபல நடன இயக்குனரும், நடிகையும், பிக்பாஸ் போட்டியாளருமான காயத்ரி ரகுராம் விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனைக் குறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள கருத்து தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பொதுக்கூட்டம் ஒன்றில் விடுதலை சிறுத்தைக் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் பேசுகையில், நான் மோடிக்கு எதிரானவன் என்றும் சில மதவெறியாளர்கள் இந்து மதத்திற்கு எதிரானவன் போன்று என்னை சித்தரித்து வருகின்றனர். ஆனால் என்னுடன் இருக்கும் தொண்டர்களில் அதிகமானோர் இந்து மதத்தினைச் சேர்ந்தவர் தான் என்று கூறியிருந்தார். இவரது கருத்திற்கு பாரதிய ஜனதா கட்சியின் தீவிர ஆதரவாளரான காயத்ரி, தங்களது நடிப்பு போதவில்லை என்றும் இந்துக்கள் இவரை எங்கு பார்த்தாலும் அடிக்க வேண்டும் என்றும் பதிவிட்டிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி திருமாவளவனுக்கு என்னை நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. அனைத்து இந்துக்களும் சேலை அல்லது ஒரு மடிசாரை அனுப்புமாறு கூறியதோடு, எனது உதவியாளரின் எண்ணைப் பரப்பி பெண்ணைத் துன்புறுத்துவதில் இவர்களின் குணம் நன்றாக வெளிப்பட்டுவிட்டது என்று கூறியிருந்தார். இவ்வாறு கூறிய காயத்ரி ரகுராமிற்கு தொடர்ந்து போன் கால் வந்து சரமாரியாக பேசியதை காணொளியாக எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி காயத்ரி ரகுராம் வீட்டிற்கு சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். மேலும் சில பெண்கள் காயத்ரி வீட்டிற்குள் நுழைய முயற்சித்ததால் பொலிசார் அவரைக் கலைந்து செல்லக்கூறியும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பொலிசார் சிலரைக் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: