திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரூ.25 லட்சம் மதிப்பில் தங்க ஷூ அணிந்த மணமகன்!

0
307

சல்மான் சாகித் என்ற தொழிலதிபர், தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், 17 லட்சம் மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட ஷூ, 63,000 மதிப்பிலான கிறிஸ்டல் மற்றும் தங்கத்தால் செய்யப்பட்ட டை ஆகியவற்றை அணிந்து வந்து மணமகளை ஒரம்கட்டியுள்ளார். எப்போதும், மணமகளின் ஆடைகள் தான் ஆடம்பரமாக இருக்கும். ஆனால் இந்த திருமணத்தில் மணமகன் தங்கத்தால் ஜொலித்துள்ளார்.

காலணிகள், ஆடை மற்றும் கிறிஸ்டல் டை என அனைத்தும் சேர்த்து மொத்த மதிப்பு 25 லட்சம் ஆகும். எதற்காக இவ்வாறு ஆடம்பரமான ஆடை என்பதற்கு இவர் அளித்த விளக்கம், நான் எப்போதும் தங்கத்தால் செய்யப்பட்ட காலணிகளை அணிய விரும்பினேன். மக்கள் எப்போதும் தங்கத்தை கிரீடமாக நினைப்பார்கள். ஆனால் தங்கம் என்பது காலுக்கு அடியில் உள்ள அழுக்கு போன்றது என்பதை மக்களுக்கு காட்டுவதற்காக இவ்வாறு செய்தேன் என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: