திருமணம் முடிந்து 7 நாட்களில் மகளை கொன்று உடலை எரித்த பெற்றோரின் வெறிச்செயல்

0
232

மகாராஷ்டிரா மாநிலத்தில் தங்கள் தோட்டத்தில் வேலை பார்த்து வந்த வேலைக்காரரின் மகனை காதலித்து திருமணம் செய்து கொண்ட மகளை பெற்றோர் எரித்து கொலை செய்துள்ளனர்.

விட்டல் பிராஜ்தார் – ஸ்ரீதேவி தம்பதியினரின் மகள் அனுராதா தனியார் கல்லூரியில் பயின்று வருகிறார்.

அனுராத தங்கள் குடும்பத்துக்கு சொந்தமான வயலில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வரும் ஒருவரின் மகனை காதலித்துள்ளார்.

கடந்த 1 ஆம் திகதி இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டனர், திருமணத்துக்கு பிறகு அனுராதாவும் அவரது காதல் கணவனும் பொராலே என்ற கிராமத்தில் வசிக்கும் அனுராதாவின் மாமா வீட்டுக்கு சென்று தங்கியிருந்தனர்.

இந்த தகவல் அறிந்து, தங்கள் மகளை சமாதானம் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த பிராஜ்தார் தம்பதியினர், கழுத்தை நெரித்து கொன்று உடலை வயலுக்கு எடுத்துச் சென்று எரித்து விட்டனர்.

அனுராதாவின் மாமா, அனுராதா வீட்டில் இல்லாததை பார்த்து பிராஜ்தாரிடம் விசாரித்தார். ஆனால், அவரிடம் இருந்து சரியான பதில் இல்லை.

இதனால், சந்தேகமடைந்த அனுராதாவின் மாமா பொலிசில் புகார் அளித்தார். பொலிசார் விசாரணையில் பிராஜ்தாரும், ஸ்ரீதேவியும் தங்கள் மகள் அனுராதாவை கொன்று உடலை எரித்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: