வரன் அமையும் திசை எது? | திருமணம் சொந்தத்திலா அந்நியமா? எவ்வளவு தூரம்!

0
3509

வாழ்க்கையில் இருக்கும் எத்தனையோ கனவுகளில் திருமணமும் ஒன்று. திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைவிட, வரப்போகிற வாழ்க்கைத்துணை எப்படி இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆண்களை பொறுத்தவரை, பார்ப்பதற்கு அழகா, சிகப்பா, லட்சனமா இருக்கனும் என்கிற ஆசை இருக்கும். உண்மையில் பார்ப்பதற்கு சினிமா ஸ்டார் ரேஞ்சுக்கு இருந்தால் இன்னும் பெட்டர்.

நான் அறிந்த வகையில் பெண்கள் கலருக்கு அதிக முக்கியத்தும் கொடுப்பதில்லை. என்றாலும், கருப்பா இருந்தாலும் களையா இருக்கனும் என்கிற விருப்பம் இருக்கும். அடுத்து நம்மை நல்லபடியா பார்த்துப்பாரா? அன்பா இருப்பாரா? அனுசரனையா நடப்பாரா? என்பதில்தான் அதிக கவனம் செலுத்துவார்கள். நல்ல வருமானத்தில் இருந்தால் பல விஷயங்களை விட்டுக் கொடுத்துவிடுவார்கள். நினைக்கிறது இருக்கட்டும். கிரகங்கள் என்ன நினைக்கிறது என்பது வேறு விஷயம். அடுத்து வரக்கூடியவர் எங்கிருக்கிறார்கள். தொலைவா? அருகிலா? அருகாமையிலா என்ற பிரதான கேள்வி இருக்கும். இந்த கேள்விக்கான விடை ஜாதகத்தில் விடை இருக்கிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: