திருமணமான சில நாட்களில் கணவரின் குறைபாட்டை கண்டுபிடித்து அதிர்ந்த மனைவி! பின்னர் நடந்த சம்பவம்!

0
317

திருமணமான சில நாட்களில் கணவர் ஆண்மையற்றவர் என்பதை மனைவி கண்டுபிடித்த நிலையில் அவரின் குடும்பத்தால் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளார்.

ஆந்திர மாநிலத்தின் சித்தூரை சேர்ந்தவர் ஷயாம் பிரசாத். இவருக்கும் உஷாராணி என்ற பெண்ணுக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி திருமணம் நடந்தது.

திருமணம் முடிந்த அடுத்த நாளே இருவரும் பெங்களூருக்கு குடிபெயர்ந்தனர்.

இந்நிலையில் திருமணமான சில நாட்களிலேயே ஷயாம் பிரசாத் ஆண்மை குறைபாடு உள்ளவர் என்பதை உஷாராணி அறிந்து அதிர்ந்து போனார்.

இது குறித்து கணவரிடம் அவர் கேட்ட போது ஷயாமும் அவர் குடும்பத்தாரும் உஷாராணியை மிரட்டியுள்ளனர்.

இந்த விடயத்தை வெளியில் யாரிடமாவது சொன்னால் கொன்றுவிடுவோம் என கூறியுள்ளனர். ஆனாலும் தனது பெற்றோரிடம் இது குறித்து கூறினார் உஷாராணி.

இதன்பின்னர் ஷயாம் மற்றும் அவர் பெற்றோர் உஷாராணியை அடித்து துன்புறுத்தி கொடுமைப்படுத்த ஆரம்பித்தனர்.

திருமணத்தின் போது உஷாராணி குடும்பத்தார் ஷயாமுக்கு ரூ 2 லட்சம் பணம், 25 கிராம் நகைகளை வரதட்சணையாக கொடுத்த போதிலும் மேலும் ரூ 1 லட்சம் வரதட்சணை வேண்டும் என கூறி அவரை கொடுமைப்படுத்தி வந்தனர்.

கணவர் மற்றும் அவர் குடும்பத்தாரின் கொடுமைகள் உச்சத்தை தொட்டதால் அதை பொறுக்க முடியாத உஷாராணி இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.

இதையடுத்து ஷயாம் மற்றும் அவர் பெற்றோர் மீது வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவர்களை கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: