திருமணமான உறவு பெண்ணுடன் ஒரே நேரத்தில் தூக்கில் தொங்கிய வாலிபர்: பின்னணி என்ன?

0
415

தமிழ்நாட்டில் வாலிபர் மற்றும் உறவுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அவர்களது உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நாகர்கோவில் அருகே உள்ள மங்காவிளை காளியான்விளையைச் சேர்ந்தவர் சுரேஷ். கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி லாவண்யா (24).

நேற்று காலை சுரேஷ் வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்ட நிலையில் லாவண்யா வீட்டில் இருந்தார்.

அப்போது லாவண்யாவின் தாய் பாப்பா அங்கு வந்த போது லாவண்யா வீட்டில் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார்.

லாவண்யா இறந்த அதேசமயத்தில் மங்காவிளை குடியிருப்பு தெருவைச் சேர்ந்த அருண்பிரகாஷ் (23) என்ற வாலிபரும் தூக்குப்போட்டு இறந்திருந்தார். லாவண்யாவும், அருண் பிரகாசும் நெருங்கிய உறவினர்கள் ஆவர்.

இருவர் சடலங்களையும் பொலிசார் கைப்பற்றினார்கள்.

உறவினர்களான லாவண்யாவும், அருண்பிரகாசும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நேரத்தில் இறந்தது ஏன்? என்பது மர்மமாகவே உள்ளது.

உறவினர்களுக்கு இடையே ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு அந்த விவகாரத்தில் இருவரும் பேசி வைத்து தற்கொலை செய்தார்களா? அல்லது 2 பேரும் ஒருவருக்கு தெரியாமல் ஒருவர் தற்கொலை செய்தார்களா? என்று தெரியவில்லை.

சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: