திருப்பூர் போலீஸார் கொடுத்த வித்தியாசமான தண்டனை!

தமிழகத்தில் வரும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டுமே வெளியே வர முடியும். ஆனால் அரசு விடுத்த எச்சரிக்கையை மீறி வாகனங்களில் பலர் வெளியே சுற்றி வந்தனர். அதனால் காவல் துறையினர் தடியடி நடத்தினர். அதன்பின் காவல் துறையினர் வாகன ஓட்டிகளுக்கு வித்தியாசமான தண்டனைகளை கொடுக்க தொடங்கினர்.
அத்தியாவசிய தேவைகள் இருக்கும் நிலையில் இரு சக்கர வாகனத்தில் ஒருவர் மட்டுமே பயணம் செய்யலாம் என காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் இந்த உத்தரவை காதில் போட்டு கொள்ளாமல் ஒன்றுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.இதற்கு திருப்பூர் போலீஸார் வித்தியாசமான தண்டனையை கொடுத்திருக்கின்றனர். அந்த வைரல் வீடியோவை நீங்களே பாருங்கள்.
By: Tamilpiththan