நேற்றைய தினம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கடையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நகைகள் திருடு போன சம்பவம் நீண்ட நாட்களாக நோட்டமிட்ட திருடப்பட்டது என்று அப்பகுதியை ஆய்வு செய்த பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அதில் இந்த திருட்டு கும்பல் பாதுகாவலர்கள் யாரும் இல்லாத நேரத்திலும், நாய்கள் காவலுக்கு இல்லாத சமயம் பார்த்து கடையை ஒட்டி இருக்கும் பள்ளியின் வழியாக வந்து, லலிதா ஜூவல்லரி கட்டடத்தின் பின்புற பக்கவாட்டு சுவரை துளையிட்டு உள்ளே புகுந்துள்ளனர்.
கொள்ளையர்கள் யாரேனும் அந்தப்பகுதியில் வருகிறார்களா, என்பதை கவனித்து, கயிறு மூலமாகவே சிக்னல் அனுப்பி திருடிய நகைகளை பைகளில் நிரப்பிக் கொண்டு, அந்த பைகளை கயிற்றில் கட்டி இழுத்து வெளியே கடத்தி இருக்கிறார்கள். பேசுவதை தவிற்கவே அவர்கள் கயிற்றால் இந்த திட்டத்தை செல்படுத்தியதாக பொலிசார் நம்புகின்றனர்.
மேலும் கொள்ளையர்கள் உள்ளே வருவதற்கும், நகைகளை கொள்ளையடித்தபின் அங்கிருந்து வெளியே செல்வதற்கும் அவர்கள் எந்த சாலையை பயன்படுத்தினர் என்பது குறித்து பொலிசார் விசாரணையில் இறங்கியுள்ளனர்.
கடையின் உரிமையாளர் இது குறித்து, 13கேடிக்கும் மேலனா மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் இச்சம்வத்தின் சிசிடிவி காட்சி இன்று வெளியிடப்பட்டுள்ளது.
திருச்சி லலிதா ஜுவெல்லரியில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள் நகைகளை கொள்ளை அடிக்கும் சிசிடிவி காட்சி
15 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் நேற்று கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது pic.twitter.com/PJEfuOxtV5
— Niranjan kumar (@niranjan2428) October 3, 2019