திருகோணமலை பெண் விரிவுரையாளர் மரணத்திற்கு இதுதான் காரணமாம்.

0
592

பெண் விரிவுரையாளர் திருகோணமலையில் காணாமல் போய் சடலமாக மீட்கப்பட்ட பெண் விரிவுரையாளர் கவிஞர் வன்னியூர் செந்தூரனின் மனைவி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

வன்னியூர் செந்தூரனின் தேசப்பற்றை சிதைக்க கயவர் செய்த உயிர் பறிப்பு அச்சுறுத்தல் நடவடிக்கை என இது கூறப்படுகின்றது.

தாயகத்தில் நல்லாட்சி என கூறி கொண்டு புலனாய்வு துறையினரால் ஒருபுறமும் இது போல் படுகொலைகளாக பாலியல் வதைகளாக தமிழ் உணர்வாளர்கள் இப்படித்தான் அச்சுறுத்தப் படுகிறார்கள்.

ஒரு பக்கம் ஆர்ப்பாட்டம் நடந்தால் இன்னொரு பக்கம் கொலை நடக்கிறது.

ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டதை மறைக்க கொலை வாள் வெட்டு கடத்தல் என சம்பவங்களை உருவாக்கி நியாயங்கள் திசை மாற்றப்படுகின்றன.

வவுனியா-ஆசிக்குளம் இலக்கம் 108 கட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய நடராசா போதநாயகி என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக விடுதியில் தங்கியிருந்த நிலையில், நேற்று (20), விடுமுறை பெற்று வீட்டுக்கு செல்வதாக சக நண்பர்களிடம் கூறி விட்டு சென்றுள்ளதாக, ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகத்தின் காவலாளிகளும், இவர் முச்சக்கர வண்டியில் சென்றதை அவதானித்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த பெண் விரிவுரையாளரின் பை மற்றும் காலணி போன்ற பொருட்கள் செப்டம்பர் 21, காலை, திருகோணமலை சங்கமித்த கடற்கரையிலிருந்து மீட்கப்பட்டு பின் அடையாளம் காணப்பட்டார்.

கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளர் சங்கமித்த கடற்கரையிலிருந்து, செப்டெம்பர் 21, 2018 அன்று பிற்பகல் சடலமாக மீட்கப்பட்டார்.

சிறிலங்கா காவல்துறையினரின் கவனத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட்டு இருந்தது.

திருகோணமலையில் இந்த கொடிய இனப்படுகொலையை இன வெறியர்கள் செய்திருக்கின்றார்கள் என மக்கள் உறுதியாக கூறி குற்றம் சாட்டுகின்றனர்.

திருமணமாகி ஒரு வருடம் கூட முடியாத நிலையில் கல்வியில் மேலோங்கிய ஒரு தமிழ் விரிவுரையாளரின் இழப்பு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல தாயக தமிழ் மாணவ பல்கலைக் கழக சமூகத்திற்கும் பேரிழப்பே.

இதற்கு காவற்துறை நீதி துறையிடம் இருந்து எந்த நீதியான காத்திரமான விசாரணை முன்னெடுப்புகளோ பதிலோ இன்னமும் வரவில்லை.

அங்கிருந்து இது குறித்த உறவுகளின் குமுறல் “நல்லிணக்கம் என்ற சொல்லை விரித்தாடும் மாயையில் கொல்லப்படும் மக்கள்

இராணுவத்தால் விபத்தில் இறந்தோரை கணக்கிட்டுப் பாருங்கள்.

போதை வஸ்து பாவனை பிடிபடுமிடங்களைப் பாருங்கள் இராணுவ காவலரண்களிருக்குமிடமே போதைப் பொருள் செறிந்த இடமாக உள்ளது.

இவை எதற்காக? ? தமிழரின் அடுத்த சந்ததி சிந்திக்காத சந்ததியாக உருவாக்கும் முயற்சியே.

இன்று சிந்திப்போர் அச்சுறுத்தப்பட்டும் கொல்லவும் படுகின்றார்கள்”

வழமை போல் தமிழர்கள் சாவுகள் சாதாரணமாக கடந்து செல்லப்படும் கொடுமைகளில் இந்த பெண் விரிவுரையாளரின் படுகொலையும்!

இதை கண்டிப்பாக மென்போக்காக கடந்து செல்ல விட கூடாது. மக்கள் பேரெழுச்சியாக எழுந்து இதனை தட்டி கேட்க வேண்டும்.

தொடரும் இனப்படுகொலையின் தொடர்ச்சியாகவே இதனை நாம் பார்க்க வேண்டும்!

இவ்வாறும் முகநுாலில் செய்திகள் பரவுகிறது எது உண்மையோ.

தொடர்புடைய செய்தி: திருமலையில் இறந்த கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளரின் பலரையும் பதற வைக்கும் இறுதி வரிகள். திருமலையில் மர்மமாக உயிரிழந்த மனைவிக்காக உருகும் கணவன்! பலரையும் கலங்க வைத்த கவி வரிகள்! கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் கொலையில் திடீர் கைது
கிழக்குப் பல்கலைக்கழக பெண் விரிவுரையாளர் உயிரிழப்பு! பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: