அதில் ஈடுபடுவதால் ஆண்களுக்கு கிடைக்கும் 10 ஆரோக்கியமான பயன்கள்!

0
3747

போருக்கு பதில் காதல் கொள்க! காதல் என்பது மன ரீதியானது மட்டுமல்லாது உடல் ரீதியானதும் தான். ஆம், உடலுறவில் ஈடுபடுவதால் பலவித நன்மைகள் அடங்கியுள்ளது. ஆண் மற்றும் பெண் என இருவருக்கும் நன்மைகள் கிட்டும். அடிக்கடி உடலுறவில் ஈடுபவர்களுக்கு இம்யூனோக்ளோபுளின் (IgA) எனப்படும் நோய் எதிர்ப்பு புரதம் மிக அதிகமாக இருக்கும் என வல்லுனர்கள் நம்புகின்றனர். இந்த IgA நோய் எதிர்ப்பு அமைப்பு தான் உங்கள் உடலின் முதல் கட்ட பாதுகாப்பு வளையமாகும். அதனால் வாரத்திற்கு குறைந்தது இரண்டு முறையாவது உங்கள் படுக்கையின் போர்வைக்குள் உங்கள் வாழ்க்கை துணையுடன் சேர்ந்து நுழைந்திடுங்கள்.

உடலுறவு கொள்வதால் கிடைக்கும் பயன்கள் எண்ணிலடங்கானது. உடலுறவு கொள்வது உடல்நலத்திற்கு மிகவும் நல்லது; குறிப்பாக ஆண்களுக்கு. அதற்கு காரணம் அது உங்கள் நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்தும், உங்கள் ஆயுளை அதிகரிக்கும், இயற்கையான பொலிவை அளிக்கும். பெண்களுக்கோ உடலுறவு கொள்வதால் அவர்களின் மாதவிடாய் காலத்தில் பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆண்களுக்கு, மலட்டுத்தன்மை என வரும் வேளையில், இது பெரிதும் உதவிடும். உடலுறவு கொள்வதால் கிடைக்கும் பிற உடல்நல பயன்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டாமா? தொடர்ந்து படியுங்கள்.

புற்றுநோய் இடர்பாட்டை குறைக்கும்
விந்துதள்ளல் உங்கள் புரோஸ்டேட்டில் உள்ள நச்சை வெளியேற்றுவதால், இது உங்களுக்கு புரோஸ்டேட் புற்றுநோய் ஏற்படாமல் பாதுகாக்கும். உடலுறவு கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் முக்கியமான பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

இரவு நேரத்தில் நல்ல ஓய்வை அளிக்கும்
உடலுறவு கொள்ளும் போது உடலில் உள்ள தசைகள் ஓய்வு பெறும். அதனால் தூங்க செல்லும் போது நல்ல உணர்வு உண்டாகும். உடலுறவு கொள்ளும் போது தூக்கமின்மை பிரச்சனையும் மேம்படும்.

கருவுறுதிறனுக்கு நல்லது
சீரான முறையில் உடலுறவு கொண்டால் ஆண்களின் கருவுறுதிறனுக்கு அது மிகவும் நல்லதாகும். ஒரு வாரத்திற்கு மேல் உடலுறவு கொள்ளாமல் இருந்தால் விந்தணுவின் வடிவமும் இயக்கமும் எதிர்மறையாக மாறிவிடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது
சீரான முறையில் உடலுறவு கொள்பவர்களை விட கொள்ளாதவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படும் இடர்பாடு 45% அதிகமாக உள்ளது. ஆண்கள் உடலுறவு கொள்வதால் அவர்களுக்கு கிடைக்கும் பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

தசைகளுக்கு நல்ல பயிற்சி
உடலுறவில் ஈடுபடும் போது உங்கள் இதய துடிப்பு ஊக்குவிக்கப்படும். இது உங்கள் கலோரிகளை எரித்து, தசைகளை வலுப்படுத்தும். அதனால் நீங்கள் ஜிம்மில் அன்றைய தினம் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போனால், உங்கள் மனைவியுடன் உடலுறவில் ஈடுபடுங்கள்.

லிபிடோவை (ஆண்மை) ஊக்குவிக்கும்
படுக்கையறையில் பிரச்சனை உள்ளவர்கள் சில வழிகளில் அதனை நிவர்த்தி செய்யுங்கள். எந்தளவுக்கு உடலுறவு செய்வதை அதிகரிக்கிறீர்களோ அந்தளவுக்கு உங்கள் உறவில் வேறுபாடு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். நல்ல உடலுறவு வாழ்க்கை உறவை மேம்படுத்தும்.

மன அழுத்தத்தைப் போக்கும்
உடலுறவு கொள்ளும் போது, நல்ல உணர்வை ஏற்படுத்தும் ரசாயனங்களை இயற்கையான முறையில் உங்கள் உடல் வெளிப்படுத்த உதவும். உடலுறவு கொள்வதால் ஆண்களுக்கு கிடைக்கும் ஆரோக்கியமான பயன்களில் இதுவும் ஒன்றாகும்.

மூளைக்கு அதிசயங்களை நிகழ்த்தும்
உடலுறவு கொண்டால், ஆணின் மூளை மனத்திறன்கள் மேம்படும். மூளையின் பின்புற மேட்டில் நரம்பணுக்கள் உற்பத்தியையும் மேம்படுத்தும்.

அனைத்து வலிகளையும் நீக்கும்
வலியை உடனடியாக நீக்க உதவுவதால், உடலுறவு கொள்வது ஆண்களுக்கு பயனுள்ளதாக விளங்குகிறது. நீங்கள் ஒரு விளையாட்டு வீரராக இருந்தால், வாரம் இருமுறையாவது உடலுறவில் ஈடுபடுவதை உறுதி செய்து கொள்ளுங்கள். அப்போது தான் உடல் கட்டுக்கோப்புடன் இருக்கும்.

இரத்த கொதிப்பை குறைக்கும்
பல ஆண்கள் இரத்த கொதிப்பால் அவதிப்படுகிறார்கள். இருப்பினும் சீரான முறையில் உடலுறவில் ஈடுபட்டால், ஆண்களின் உடல்நலத்திற்கு அது மிகவும் நல்லதாகும். அதற்கு காரணம் அது உங்கள் இரத்த கொதிப்பை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த 4 குணங்கள் கொண்ட நண்பர்கள் இருந்தால் உங்கள் வாழ்க்கையில் பேரழிவு ஏற்படுவது உறுதி!
Next articleபிறந்ததேதிய வெச்சு முன் ஜென்மத்துல என்னவா இருந்தீங்கனு தெரியணுமா!