தினமும் சாப்பிடுவதற்கு முன் சில‌ தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிடுவதனால் நிறைய மாற்றங்கள் நடக்கும்!

0
603

எத்தனை நாட்கள் வாழ்கிறோம் என்பதை விட எந்த அளவுக்கு ஆரோக்கியமாக வாழ்கிறோம் என்பதே முக்கியமானதாகும். ஆரோக்கிய பிரச்சனைகள் இருந்தால் அது நமது அன்றாட வேலைகளை பாதிக்கும். அடிக்கடி மருத்துவமனையை தேடி செல்ல வேண்டியிருக்கும். அடிக்கடி மருந்து மாத்திரைகளை சாப்பிட்டு வருவதும் அந்த அளவிற்கு நல்லதல்ல.

நமது தினசரி வாழ்க்கையில் அடிக்கடி சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு வெளியில் சென்று தான் மருந்து தேட வேண்டும் என்ற அவசியம் இல்லை. சத்தான உணவுகளையும், நமது இயற்கை மூலிகைகளையும் உணவில் சேர்த்து வந்தாலே நோய்கள் நம்மை விட்டு எட்டி நிற்கும். இந்த பகுதியில் நாம் அடிக்கடி சந்திக்கும் சில ஆரோக்கிய பிரச்சனைகளும் அதனை எப்படி நாட்டுமருத்துவம் மூலமாக வெல்லலாம் என்பதை பற்றியும் காணலாம்.

தேங்காய்
வாய்ப்புண் உள்ளவர்களுக்கு காரம் என்றால் ஆகாது. அதனால், முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் வாய்ப்புண் எளிதில் ஆறும்.

ரத்த உற்பத்திக்கு
ரத்தம் குறைவாக உள்ளது என்பது அதிகப்படியானோருக்கு இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனையாகும். இதற்கு, கசகசா, வாழைப்பூ, மிளகு, மஞ்சள் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் ரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

மாதவிலக்கு சரியாக
பெண்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று தான் மாதவிலக்கு பிரச்சனையாகும். இதற்கு, கருஞ்சீரகத்துடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் தடைபட்ட மாதவிலக்கு சரியாகும்.

ரத்த சோகை குணமாக
கீழாநெல்லி, கரிசாலை இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து தினமும் பத்து கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை குணமடையும்.

சிறுநீர் எரிச்சல்
வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

இரத்த குழாய் கொழுப்பு
உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணையைச் சாப்பிட்டு வந்தால், ரத்தக் குழாயில் கொழுப்பு படியாமல் தடுக்கலாம். இதனால் ஆயுள் அதிகரிக்கும்.

சீதபேதி
ஜாதிக்காயைச் சிறு சிறு துண்டுகளாகச் சீவி, அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும். இந்த பாதிப்பு உள்ளவர்கள் தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை அதிகம் உட்கொள்வது நல்லது.

உடல் வலி
சிறிது தண்ணீரில் ஒரு கரண்டி ஓமம் போட்டு கொதிக்க வைத்து, அதில் 100 மில்லி தேங்காய் எண்ணெயை விட்டு மீண்டும் கொதிக்க விட்டு வடிகட்டி கொள்ளுங்கள். வடிகட்டியதோடு கற்பூரப் பொடியைக் கலந்து இளஞ்சூட்டுடன் நன்றாகத் தேய்த்து வர உடம்பு வலி நீங்கும்.

மூளை பலமாக
துளசி மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடியது. அதற்கு, துளசி இலையை ஒரு டம்ளரில் பறித்துப் போட்டு ஊற வைத்து, அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

தொண்டை புண்
தொண்டையில் புண், வலி ஏற்பட்டால் கொஞ்சம் சித்தரத்தைப் பொடியுடன் தேன் கலந்து சாப்பிடவும். தொண்டைப் புண் பாதிப்பு குணமான பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் அந்த பாதிப்பு முற்றிலும் குணமாகும்.

அஜீரணம்
அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து இலை. அதனை சாப்பிட்ட உடனேயே பலனை எதிர்பார்க்கலாம்.

கொத்தமல்லி
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: