இந்த நோய்கள் சீக்கிரம் குணமாக தினமும் காலையில் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை இப்படி குடியுங்கள்!

0

இந்த நோய்கள் சீக்கிரம் குணமாக தினமும் காலையில் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை இப்படி குடியுங்கள்!

மனிதனாக பிறந்த எல்லோருமே நண்டகாலம் ஆரோக்கியமாகவும், இளமைத் தோற்றத்துடனும் வாழ ஆசைப்படுவது ஒன்றம் புதிதில்ல. எனினும் அப்படி நீண்ட காலம் வாழுறதுக்கு சில முக்கியமான ஆரோக்கியமான வாழ்க்கை முறைமைகள் மற்றும் பழக்கவழக்கங்களை தினமும் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டியது மிகவும் அவசியம். நம் முன்னோர்கள் நீண்ட ஆயுசுடனும் மிகுந்த உடல் வலிமையுடனும், ஒரு சிறு நோய்த் தாக்குதலின்றியும் வாழ்ந்து வந்ததற்கு அவர்கள் பின்பற்றிய சிறப்பான உணவு மற்றும் இதர பழக்கவழக்கங்களே அடிப்படையாக அமைந்தன.

ஜங்க் உணவுகள் திரும்பும் இடமெங்கும் இலகுவில் கிடைக்கக் கூடியதாக காணப்பட்டு எமது நேரத்தை மீதப்படுத்தும் அதேவேளை, அவற்றில் சேர்க்கப்பட்டுள்ள செயற்கை சுவையூட்டிகள் பலரை இந்த உணவுகளுக்கு அடிமையாக்கியுள்ளதுடன், இலகுவில் பலவகையான நோய் தாக்குதலுக்கு உள்ளாகக் கூடிய வகையில் எமது உடலை மிகப் பலவீனமாக மாற்றியுள்ளது. எனஆவ, ஆரேர்க்கியமாக வாழவிரும்பம் நீங்கள் எம் முன்னோர் போன்று புத்திசாலித்தனமாக ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுத்து உண்பதோடு, அவ்வப்போது நம் உடலை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பானங்களையும் பருகுதல் அவசியமாகும்.

உடலிலலுள்ள நீரினளவு குறைவடைந்து உடல் வரட்சியடையாமல் இருக்க உடல் சூட்டைத் தணிக்கக் கூடிய நன்கு நீர்ச்சத்து நிறைறந்த காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுதல் நல்லது. அத்தகைய பழங்களில் ஒன்றாகிய சுரைக்காயுடன் இஞ்சி கலந்து ஜூஸ் செய்வது எவ்வாறு மற்றும் அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா?

ஜூஸ் தயாரிக்கும் முறை:

முதலில் சுரக்காயை மிக்ஸியில் போட்டு, சிறிது நீர் ஊற்றி நன்கு மென்மையாக அரைத்து, பின்னர் அதை ஒரு டம்ளரில் ஊற்றி, அத்துடன் ஒரு தேக்கரண்டி அளவு இஞ்சி பேஸ்ட் அல்லது இஞ்சி பவுடர் அல்லது இஞ்சி சாறு சேர்த்து கலந்து றெப்படும் ஜூஸை தினமும் காலை சாப்பாட்டிற்கு முனனர்; குடித்து வருதல் நல்லது.

உடல் வெப்பம் குறையும்

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்து வந்தால், மிக சூடான காலநிலை, ஹார்மோன் மாற்றங்கள், அசாதாரண வளர்சிதை; போன்றனவற்றினால் உடல் வெப்பம் அதிகரிகரிக்கப்பட்டு, சமிபாட்டுப் பிரச்சினைகள், தலைவலி மற்றும் சில சமயங்களில் மூக்கில் இருந்து இரத்தம் வடிதல் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் விடுபட முடியும்.

அஜீரண கோளாறு சரியாகும்

தினமும் இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்து வரும் போது, அதிலுள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் குறிப்பிட்ட நொதிகள் வயிற்றில் சுரக்கும் அமிலத்தை நீக்கி, எமது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள், அமர்ந்திரந்தவாறே வேலை செய்வது அல்லது மன அழுத்தம் போன்றவற்றால் சமிபாட்டுப் உருவாக்கப்படும் சமிபாட்டுப் பிரச்சினைகளின் தீவிரத்தால் ஏற்படக் கூடிய நெஞ்செரிச்சல், இரைப்பை அழற்சி மற்றும் குடல் புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

உடல் எடை குறையும்

இஞ்சி சேர்த்த சுரைக்காய் ஜூஸை தினமும் காலையில் குடித்து வந்தால், அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் கே போன்றவை உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புக்களை விரைவில் கரைத்து, உடல் எடையைக் குறைக்கும். மேலும், குறைந்தளவான கலோரிகளைக் கொண்ட இந்த ஜூஸை தினமும் குடிப்பதுடன், சரிவிகித டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வரும் போது, எதிர்பார்த்த பலன் கிடைக்கும்.

உயர் இரத்த அழுத்தம் குறையும்

உயர் இரத்த அழுத்தம் என்பது இரத்தமானது தமனிகளின் சுவருக்கு எதிராக அழுத்தப்படுகின்ற நிலைமையைக் குறிக்கும். இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்க கூடிய பொட்டாசியம் உள்ளதனால் இப்பிரச்சினை உள்ளவர்களுக்கு இது ஒரு அற்புதமான பானமாகும்.

சிறுநீரக பாதை தொற்றுக்களை சரிசெய்யும்

சுரைக்காயில் உள்ள நீர்ப்பெருக்கி பண்புகள், சிறுநீரக பாதையில் உள்ள சிறுநீர் செல்லும் குழாய்கள் மற்றும் சிறுநீர்ப்பையில் ஏற்படக் கூடிய மோசமான பாக்டீரியாக்களின் தாக்கத்தினாலும் குறிப்பாக பாலியல் உறவின் போது அதிகளவில் ஏற்படக் கூடிய சிறுநீரக பாதை தொற்றுக்களை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களை வெளியேற்ற உதவக் கூடியனவாக காணப்படுகின்ற வகையில், உங்களுக்கு இந்த தொற்று ஏற்படாமல் இருக்க நினைத்தால், இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் தினமும் குடியுங்கள்.

கல்லீரல் அழற்சியை போக்கும்

மனித உடலிலேயே மிகவும் பெரிய மற்றும் மிக அத்தியாவசியமான உறுப்பும் ஆகிய கல்லீரலில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அதனால் உயிரையே இழக்க வேண்டியிருக்கும். இந்நிலையில், இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை தினமும் குடித்து வரும் போது ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள், அதிகளவு மது பானங்களை அருந்துவது, குறிப்பிட்ட தொற்றுகள், சில மருந்துகளின் பக்க விளைவுகள் போன்றவற்றால் ஏற்படக் கூடிய கல்லீரலில் அழற்சியினைத் தடுக்க, தசைக் காயங்களை சரிசெய்யும்

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை ஒருவர் உடற்பயிற்சிக்குப் பின் குடித்து வரும் போது, அதிலுள்ள பொட்டாசியம் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், தசைகளுக்கு ஊட்டமளித்து, தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்து உடற்பயிற்சிக்குப் பின்னரான, தசைகளில் ஏற்படக் கூடிய கடுமையான வலியினையம் நீக்கும்.

இதய ஆரோக்கியம்

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸை ஒருவர் தினமும் காலையில் குடித்து வரும் போது, அதில் உள்ள வைட்டமின் கே மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், இதயத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்து இதய நோயின் பாதிப்புகளைக் குறைக்கும்.

காலைச் சோர்வு

இஞ்சி கலந்த சுரைக்காய் ஜூஸைக் குடித்து வரும் போது, கர்ப்பிணிகள் பொதுவாக காலையில் எதிர்நோக்கும் மிகுதியான சோர்வு, குமட்டல் போன்ற உணர்வுகளிலிருந்து விடுபட முடியும் எனினும், இந்த பானத்தைக் குடிக்கும் முன் கர்ப்பிணிகள் மருத்துவரிடம் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவது அவசியம்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகொய்யா இலைகளை எங்கே பார்த்தாலும் விடாதீங்க ஏன் தெரியுமா?
Next articleரணில் விவகாரம் சூடு பிடித்த நிலையில் வெளியேறினார் மகிந்த!!