தாய்லாந்து குகையில் மீட்கப்பட்ட சிறுவர்கள் புத்த பிட்சுக்கள் ஆனார்கள்!

0
328

தாய்லாந்து குகையில் சிக்கி மீட்கப்பட்ட சிறுவர்கள் பிரார்த்தனைக்காக தற்காலிக புத்த மத துறவிகள் ஆகி உள்ளனர்.

தாய்லாந்து நாட்டின் சியாங் ராய் பகுதியில் உள்ள குகையில் சுற்றுலா சென்ற 12 சிறுவர்களும் அவர்களுடைய கால்பந்து பயிற்சியாளரும் மழை காரணமாக குகையில் சிக்கிக் கொண்டனர்.

கடும் போராட்டத்துக்கு பிற்கு அவர்கள் மீட்கப்பட்டனர். அந்த மீட்புப்பணியில் நீச்சல் வீரர் ஒருவர் உயிர் இழந்தார். மீட்கப்பட்ட அனைவரும் தற்போது நலமாக உள்ளனர்.

மீட்கப்பட்ட சிறுவர்கள் தங்களை பத்திரமாக மீட்டதற்கு நன்றி செலுத்தும் வகையில் புத்த துறவிகளாகி 9 நாட்கள் புத்த விகாரத்தில் தங்கி சேவை செய்ய உள்ளனர்.

இவர்களில் ஒருவரான அப்துல் சாம் ஆன் என்பவர் கிறித்துவ மதத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் ஒரு தேவாலயத்தில் நன்றி தெரிவிக்கும் விரதத்தை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த சிறுவர்களின் பயிற்சியாளரும் புத்த மதத்தை பின்பற்றுபவர் என்பதல் அவரும் இவர்களுடன் கலந்துக் கொள்கிறார்.

புத்த மத வழக்கப்படி இவர்கள் அனைவருக்கும் மொட்டை அடிக்கப்பட்டு ஒற்றை வெள்ளை ஆடை அணிவிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒன்பது நாள் புத்த விகாரத்தில் துறவிகளாக பணி புரிவார்கள்.

இந்த ஒன்பது நாட்களும் இவர்கள் புத்தர் பிரார்த்தனை, மக்கள் தொண்டு அகியவைகளில் ஈடுபட உள்ளனர்.

இவர்கள் கல்வி பயின்று வருவதால் 9 நாட்கள் கழித்து இவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பி விடுவார்கள்.

தாய்லாந்தில் அபாயத்துக்கு உள்ளாகி தப்பிப்பவர்கள் பொதுவாக இப்படி வேண்டுதல் நிறைவேற்றுவது உண்டு. இந்த சிறுவர்கள் துறவியாகும் விழாவுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வண்டிருந்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: