தாய்க்கு உயர்வு அளித்த சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து!

0
340

தாய்க்கு உயர்வு அளித்த சுர்ஜித்! ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்து!

கடந்த மாதம் 25 ஆம் திகதி திருச்சி மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த நிலையில், 4 நாட்களாக மீட்க போராடி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிலையில், பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் சுர்ஜித் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர்.

அதோடு, சுர்ஜித் பெற்றோரான, பிரிட்டோ ஆரோக்கியதாஸ், கலாராணிக்கு ஆறுதல் கூறினர். இதைத்தொடர்ந்து, தமிழக அரசு மற்றும் ஆளும் மற்றும் எதிர்கட்சிகள் சார்பில் சுர்ஜித் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிலையில், சுர்ஜித்தின் பெற்றோர் தங்களது குடும்பத்தில் இருப்பவர்களில் ஒருவருக்கு அரசு வேலை வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், சுஜீத்தின் தாய் கலாராணி பிளஸ் 2 வரை படித்துள்ளதால், அவருக்கு அரசு வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: