தாயும் மகளும் வெட்டிப் படுகொலை! இலங்கையை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்!

0
294
Sign Up to Earn Real Bitcoin

மஹியங்கனை – மாபாகடவெவ பிரதேசத்தில் இரண்டு பெண்கள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றிரவு நடைபெற்ற இச்சம்பவத்தில் தாயும் மகளுமே வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் இகிரியகொட – மாபாகடவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதுடைய பெண்ணும், அவரது 40 வயதுடைய மகளுமே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் மகன் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த படுகொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: