தாயின் சடலத்துடன் வாழ்ந்து வந்த மகன்! 51 வயதிலும் ஒழுக்கமின்றி இருந்ததால் கொலை செய்தேன்! மகன் அதிர்ச்சி வாக்குமூலம்!

0
409

புதுச்சேரி மாவட்டத்தில் தாயை கொலை செய்து அவரின் சடலத்துடன் 7 நாட்கள் வாழ்ந்து வந்த மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.

51 வயதான ஜெயமேரிக்கு அமலோற்பவநாதன் என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் தாய் ஜெயமேரியை அவரது மகன் கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சுமார் 7 நாட்கள் கழித்து காவல் நிலையம் சென்ற மகன், பொலிசில் அளித்துள்ள வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனது தாயை கடந்த 5-ந் தேதி கத்தியால் வெட்டி கொலை செய்து விட்டதாகவும், வீட்டின் அறைக்குள் அவரது பிணத்தை வைத்து பூட்டி வைத்திருக்கிறேன். 7 நாட்கள் அவரது சடலத்துடன் தான் வாழந்து வந்தேன்.

51 வயதாகியும் அவர் ஒழுக்கமின்றி நடந்துகொண்டார். அதிகமாக வாலிபர்களுடன் போனில் பேசி வந்தார். இதனால் கோபம் கொண்டு அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று காலை ஜெயமேரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது சகோதரியிடம் ஒப்படைக்கப்பட்டது. அமலோற்பவநாதன் வாக்குமூலத்தை பதிவு செய்த பொலிசார் அவரை புதுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபொள்ளாச்சி பாலியல் வழக்கு குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை கிடைக்கும்!
Next articleமகளுக்கு டீ மாஸ்டர் கொடுத்த வரதட்சணை! வைரல் பேச்சு இதுதாங்க!