தாயின் கள்ளக்காதலை நேரில் பார்த்த சிறுவன்! பின்பு தாய் எடுத்த அதிரடி முடிவு!

0
398

உல்லாசம் அனுபவித்ததை நேரில் பார்த்ததால் மகன் என்றும் பாராமல் அவரை தாய், கள்ளக்காதலனுடன் இணைந்து ஏரியில் மூழ்கடித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம், கொள்ளேகால் தாலுக்கா சிலுகலுபுரா கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டசாமி. இவரது மனைவி சாக்கம்மா. இவர்களுக்கு மகாதேவ பிரபு என்ற 7 வயதில் மகன் இருந்தார். அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 8-ஆம் தேதி பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த பிரபு விளையாடுவதற்காக வெளியே சென்றார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த நஞ்சுண்டசாமி பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதனைபற்றி பொலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின்பேரில் பொலிசார் சிறுவனை தேடி வந்தனர். அப்போது கடந்த 10-ஆம் தேதி அந்த கிராமத்தில் உள்ள ஏரியில் ஒரு சிறுவனின் சடலம் மிதப்பதாக கொள்ளேகால் பொலிசார் விரைந்து சென்று அந்த சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர்.

இதில் அச்சிறுவன் நஞ்சுண்டசாமியின் மகன் என்பது தெரியவந்தது. சிறுவன் ஏரியில் தவறி விழுந்தாரா அல்லது யாராவது கொன்று வீசிவிட்டனரா என பொலிசார் விசாரணை நடத்தி வந்தனர்.

மேலும் சிறுவனின் உடலில் காயம் இருந்ததால் அவரை யாரோ கொலை செய்துள்ளனர் என்பது பொலிசாருக்கு தெளிவாக தெரிந்தது. இதுகுறித்து கொள்ளேக்கால் பொலிசார் விசாரணை நடத்திய நிலையில் சிறுவனை அதே கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ மூர்த்தி என்பவர் மோட்டார் சைக்கிளில் வைத்து அழைத்து சென்றதாக பொலிசாருக்கு துப்பு கிடைத்தது.

இதையடுத்து நாகராஜ மூர்த்தியிடம் பொலிசார் விசாரணை நடத்தினர். கள்ளக்காதல் அப்போது அவரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்கு பின் முரணான பதில் அளித்தார். அப்போது அவர் அளித்த வாக்குமூலத்தில் நஞ்சுண்டசாமியின் மனைவி சாக்கம்மாவுக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த நாகராஜமூர்த்திக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. அதிர்ச்சி இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 8-ஆம் தேதி நஞ்சுண்டசாமி வீட்டில் இல்லாத நேரத்தில் இருவரும் உல்லாசம் அனுபவித்தனர். அப்போது பிரபு பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்ததால் இவர்களை பார்த்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் தங்கள் தொடர்பை நஞ்சுண்டசாமியிடம் கூறிவிடுவாரோ என பயந்தனர்.

இதனால் பிரபுவை கொலை செய்ய திட்டமிட்டு நாகராஜ மூர்த்தி தனது பைக்கில் அழைத்து சென்று ஏரியில் மூழ்கடித்து கொலை செய்துவிட்டார். சிறுவனை மீட்கும்போது இருவரும் ஒன்றும் தெரியாதது போல் இருந்துள்ளனர். இதையடுத்து இருவரையும் பொலிசார் கைது செய்தனர்.

Previous article11 ஆண்டுகள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த உண்மை! காதலனுக்காக கணவனை கொலை செய்தேன்!
Next articleபேஸ்புக் விருந்து நள்ளிரவில் வைத்த இளைஞர், யுவதிகள் அதிரடியாக கைது!