தாயின் கள்ளக்காதலால் ஏற்பட்ட விபரீதம்: கோடூரமாக கொலை செய்யப்பட்ட மகன்!

0
325

தாயின் கள்ளக் காதலால் மகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அம்பன்பொல வலத்வௌ அம்போகம பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உயிரிழந்த 28 வயதுடைய இளைஞரின் தலையில் காணப்பட்ட காயத்தின் மேல் சந்தேகம் கொண்ட பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலமே தாயின் கள்ளக் காதலனால் இளைஞன் படுகொலை செய்யப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் மூலம் உயிரிழந்த இளைஞர் மற்றும் கைது செய்யப்பட்ட நபருக்கு இடையில் நீண்ட காலமாக நிலவிவந்த கருத்து வேறுபாடு காரணமாக இரும்பு கம்பியால் தாக்கப்பட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தோடு தொடர்புடைய 54 வயதான தாயின் கள்ளக் காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக குருநாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் அம்பன்பொல பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: