தாயின் உடலை துண்டு துண்டாக்கி பாதுகாத்த மகன்: அதிர்ச்சி சம்பவம்!

0
439

மேற்குவங்கத்தில் உயிரிழந்த தாயின் உடலை துண்டு துண்டாக வெட்டி அதை குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வைத்திருந்த மகனின் செயல் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் கோபால் சந்திர மஜும்தார்.

இவரது மனைவி பினா மஜும்தார், இருவரும் இந்திய உணவுக் கழகத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்கள், வயதானதால் நீரிழிவு உட்பட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் கடந்த 2015ம் ஆண்டு மருத்துவமனையில் பினா உயிரிழந்துள்ளார். இந்நிலையில் அவரது மகன் சுபப்பிரதா தாயின் உடலை பாதுக்காக்க திட்டமிட்டுள்ளார்.

அதன் படி, சடலத்தை வீட்டுக்கு கொண்டு வராமல், குளிர்சாதன பெட்டியை மட்டும் எடுத்து வந்துள்ளனர்.

வீட்டின் கீழ்தளம் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டது, பின்னர் தனது தாயின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்துள்ளார். இவருடன் பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு நெருக்கம் இல்லாததால் யாரும் கண்டுகொள்ளவில்லை.

இந்நிலையில் உறவினர்களுக்கு சந்தேகம் எழ, பொலிசுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் பொலிசார் நடத்திய சோதனையில், பினாவின் உடல் துண்டு துண்டாக்கப்பட்டு குளிர்சாதன பெட்டியில் பாதுகாத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

சடலத்தை கைப்பற்றிய பொலிசார் அவர்களது மகன் சுபப்பிரதாவை கைது செய்து அவரது தந்தையிடமும் விசாரணை நடத்தினர். இது குறித்து அவர் கூறும்போது,

தாய் மீண்டும் உயிர்பெற்று வருவார் என்ற நம்பிக்கையில் இவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஐயோ கடவுளே… உலகத்துல இப்படியுமொரு ஆணா?.. கொடுமையை பார்த்து சிரிக்கத்தான் செய்வீங்க
Next article42 வயதில் பிகினி உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் ஆக்கிய சுஷ்மிதாசென்- புகைப்படம் இதோ!