தாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து தெருவில் ஊர்வலம் நடத்திய கும்பல்! அதிர்ச்சி காரணம்!

0
388

இந்தியாவின் பீகார் மாநிலத்தில் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறி கும்பல் ஒன்று தாயாரையும் மகளையும் தலை மொட்டையடித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கொடூர சம்பவம் கிராம தலைவரின் முன்னிலையில் நடந்தேறியது, அங்குள்ள மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

பீகாரின் வைஷாலி கிராமத்திலேயே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. சம்பவத்தன்று வீடு புகுந்த கும்பல் ஒன்று 19 வயது இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்ய முயன்றுள்ளது.

இதில் அதிர்ச்சியடைந்த 48 வயதான அவரது தாயார், மகளை அந்த கும்பலிடம் இருந்து காப்பாற்ற போராடியுள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட அந்த கும்பல் தாயாரையும் மகளை கொடூரமாக தாக்கியுள்ளது. மேலும், இருவரையும் வலுக்கட்டாயமாக பிடித்து சென்றுள்ளது.

பின்னர் கிராம தலைவரின் முன்னிலையில், இருவரையும் தடியால் தாக்கி, தலை மொட்டையடித்துள்ளனர். இருவரும் பாலியல் தொழில் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

தொடர்ந்து இருவரையும், தெருவில் ஊர்வலம் நடத்தியுள்ளனர். இந்த விவகாரம் காவல் துறைக்கு தெரியவரவே, அவர்கள் சம்பவ பகுதிக்கு சென்று விசாரித்துள்ளனர்.

விசாரணையில், அந்த தாயார் மற்றும் மகள் மீது எந்த குற்றவும் இல்லை என்பது உறுதியான நிலையில், கிராம தலைவர் மற்றும், தலை மொட்டையடிக்க தூண்டிய கும்பல் உள்ளிட்டவர்களை கைது செய்துள்ளனர்.

வீடு புகுந்து தாக்குதல், கொலை மிரட்டல், பாலியல் துஸ்பிரயோகம் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்கள் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்தியாவில் முதல் முறை பல தடைகளைத் தாண்டி சாதித்த திருநங்கை மருந்தாளர்! பின்னணியில் இவ்வளவு சோகமா!
Next articleடாய்லெட்டில் மொபைல் உபயோகிக்கும் நபரா நீங்கள்! அப்போ இது உங்களுக்கு தான்!