தாங்க முடியாத முதுகுவலியா? குணப்படுத்த உத்தனாசனம் செஞ்சு பாருங்க!!

0
680

தாங்க முடியாத முதுகுவலியா? குணப்படுத்த உத்தனாசனம் செஞ்சு பாருங்க!!
தொடர்ந்து ஒரே அமர்ந்து கொண்டே வேலை செய்பவர்களுக்கு அல்லது ஒரே மாதிரி நின்று கொண்டே இருப்பவர்களுக்கு முதுகு வலி இருந்து கொண்டேயிருக்கும். உடல் பருமனானவர்களும் இதில் அடக்கம்.

இதற்கு அதிகப்படியாக முதுகிற்கு அழுத்தம் தரப்படுவதால் உண்டாகும் பாதிப்பே. அதனை கவனிக்காமல் விடும்போது, முதுகுத் தண்டுவடம், கழுத்து ஆகிய இடங்களுக்கும் பரவி, உங்கள் இரவு தூக்கத்தை கெடுத்துவிடும்.

முதுகு வலியால் நீங்கள் அவதிப்பட்டால் உத்தனாசனாவை செய்து பாருங்கள். இது முதுகில் நெகிழ்வுத்தன்மை தந்து உங்கள் வலியை போக்கி, புத்துணர்வு தரும். அதோடு, முதுகிற்கு பலமும் அளிக்கிறது.

உத்தனாசனா : முதுகு வலியால் நீங்கள் அவதிப்பட்டால் உத்தனாசனாவை செய்து பாருங்கள். இது முதுகில் நெகிழ்வுத்தன்மை தந்து உங்கள் வலியை போக்கி, புத்துணர்வு தரும். அதோடு, முதுகிற்கு பலமும் அளிக்கிறது.

செய்முறை : முதலில் தடாசனத்தில் நில்லுங்கள். நேராக முதுகை வளைக்காமல் நிமிர்ந்து நிற்க வேண்டும். பிறகு ஆழ்ந்து மூச்சை விடுங்கள்.

செய்முறை : பின்னர் மெதுவாக குனியவும். வயிறும் மார்பும் தொடைப்பகுதிக்கு அருகில் வர வேண்டும்.

நீங்கள் இப்போது சௌகரியமான நிலையை ஏற்படுத்திக் கொண்டதும், மெதுவாக குனிந்து உங்கள் கைகளால் பாதங்களை தொடவும்.

செய்முறை : இப்போது உங்களால் முடிந்தால் முகத்தை கால்களுக்கு இடையே பொத்திக் கொண்டு கைகளை பின்னுக்கு கொண்டு சென்று குதி கால்களை பிடித்துக் கொள்ளலாம். முடியவில்லையென்றால் கைகளால் பாதத்தை பிடித்தபடி சில நொடிகள் இந்த நிலையில் இருந்தபின் இயல்பான நிலைக்கு வரவும்.

பலன்கள் : முட்டியை பலப்படுத்துகிறது. ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. கழுத்து, தோள்பட்டையை வலுப்படுத்தும். மன அழுத்தத்தைன்போக்கும். கல்லீரல் இயக்கத்தை தூண்டுகிறது.

குறிப்பு : மூட்டு, கால் அறுவை சிகிச்சை செய்தவர்கள், முதுகில் அடிப்பட்டவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்கவும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: