தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான மாஸ்டர் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது. அடுத்து இவர் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் தளபதி 65.
இப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதை தள்ளி வைத்தார் விஜய்.
இந்நிலையில் தளபதி விஜய் அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிப்பில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அப்படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள் என்றும் அதில் ஒரு நாயகியாக நடிகை கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: