தலை துண்டிக்கப்பட்டதாலும் கழுத்திலேற்பட்ட மிகப்பாரிய தாக்கத்தினாலும் ஏற்பட்ட மரணம்!

0
280

இறக்காமம் 7ம் பிரிவு குடுவில் பிரதேசத்தில் கடந்த 23ம் திகதி மதியம் கிணறு பதிக்கும் சம்பவத்தின்போது உயிரிழந்த சீனித்தம்பி சந்திரசேகரம் (வயது51) என்ற நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.

அவ்வறிக்கையில் தலை துண்டிக்கப்பட்டதாலும் கழுத்திலேற்பட்ட மிகப்பாரிய தாக்கத்தினாலும் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை சட்டவைத்திய நிபுணர் டாக்டர் டி.ருச்சிர நதீரா தெரிவித்துள்ளார்.

தமண பொலிஸ் பிரிவில் கடந்த சனியன்று இடம்பெற்ற இச்சம்பவத்தின்போது சமுகமளித்த அம்பாறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஹன்சதேவ சமரதிவாகர விடுத்த வேண்டுகோளின்பேரில் மேற்படி பிரே தபரிசோதனை இடம்பெற்றது.

அம்பாறை பொது வைத்தியசாலையில் 25ம் திகதி காலை 10 மணிக்கு இடம்பெற்ற பிரேதபரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

சடலம் அவர் பிறந்த கொக்கட்டிச்சோலையிலுள்ள முனைக்காட்டிற்கு எடுத்துசெல்லப்பட்டு அங்கு நேற்று(25) மாலை அடக்கம் செய்யப்பட்டது.

ஏழைத்தொழிலாளியான இவர் வீரமுனையில் மூன்று வருடகாலம் தங்கியிருந்து கூலித்தொழில்செய்து வாழ்க்கையை கடத்திவந்த சமயம் இம்மரணம் சம்பவித்தது.

இதேவேளை, காரைதீவு பிரதேசசபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் பிரேதஅடக்கத்திற்கான செலவைப் பொறுப்பேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: