தலைமுடி அதிகமா கொட்டுதா! இத பண்ணுங்க முதல்ல!

0

சீகைக்காயில் நிறைந்துள்ள சத்து பொருட்கள் நம் தலைமுடியின் வேர்களுக்கு வேண்டிய அனைத்து நுண்ணுயிர் சத்துக்களை வழங்கி, முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, அதன் அடர்த்தியையும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது.

அதனால் தான் அக்காலத்தில் நம் முன்னோர்களுக்கு தலைமுடி உதிர்வு பிரச்சனையும், வழுக்கைத் தலை பிரச்சனையும் இல்லாமல் இருந்தது.

அப்படிப்பட்ட குளியலுக்கு பயன்படும் சீகைக்காய் பொடியை எப்படி தயார் செய்வது என்பதைப் பற்றி இப்போது பார்ப்போமா…

தேவையான பொருட்கள் :

1. சீயக்காய்- 1 கிலோ

2. செம்பருத்திப்பூ- 50

3.பூலாங்கிழங்கு( நாட்டுமருந்து கடைகளில் கிடைக்கும். ஷாம்பூ போல நுரை வரும்) – 100 கிராம்,

4.எலுமிச்சை தோல் (காய வைத்தது) – 25 கிராம் (தோல் வியாதி உள்ளவர்கள் தவிர்க்கவும்,இது பொடுகை நீக்கும்)

5. பாசிப்பருப்பு (முடி ஷைனிங்குக்கு) – 1/4 கிலோ,

6. மருக்கொழுந்து (வாசனைக்கு) – 20 குச்சிகள்,

7. கரிசலாங்கண்ணி இலை(முடி கருப்பாக)- 3 கப்

மேற்கண்ட அனைத்தையும் வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொண்டால் வெறும் தண்ணீர் மட்டும் கலந்து தலைக்கு தடவி அலசலாம்.

சாதம் வடித்த கஞ்சி தேவையில்லை.சேர்த்தாலும் தவறு இல்லை.குளியல் சோப்பை வீட்டில் வாங்குவதையே விட்டு விடுங்கள். ஆறு,குளம் போகும் போது சீகைக்காய் தூள் கொண்டு செல்லுங்கள். தண்ணீர் மாசுபாட்டை தவிருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநுரையீரலில் தேங்கி இருக்கும் சளியை முற்றிலுமாக அகற்ற உதவும் எளிய முறை!
Next articleகாலை உணவாக வெறும் 3 முட்டை சாப்பிட்டு பாருங்க!