இலங்கையில் அரசியல் ரீதியாக ஏற்பட்டுள்ள பரபரப்பு நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடிய கலந்துரையாடினர்.
இலங்கையில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவுடனே எந்தவொரு கட்சியும் ஆட்சி அமைக்க முடியும்.
இந்நிலையில் இன்றைய தினம் அவசரமாக கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது என்ன விடயங்கள் பேசப்பட்டன. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சந்தித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் என்ன விடயங்களை முன்வைத்தார் என்ற விடயங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தகவல் தந்தார்.
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: