தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்!

0
354

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தல், தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்? புதிய வரவுகளான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியலில் சாதிப்பார்களா? என்பது பற்றி தனியார் தொலைக்காட்சி ஒன்றி கருத்து கணிப்பை நடத்தி உள்ளது

புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் 32 மாவட்டங்களிலும், ஒரு மாவட்டத்துக்கு 250 பேர் வீதம் மொத்தம் 8,250 பேரிடம் தனித்தனியாக கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இவர்களில் 4,125 பேர் ஆண்கள்; 4,125 பேர் பெண்கள்.

ஜூலை 1–ந் தேதி முதல் 11–ந் தேதி வரை புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.

இந்த கருத்து கணிப்பில், ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழக அரசியலில் சாதிக்க முடியாது என்ற பரபரப்பான முடிவு தெரியவந்து உள்ளது.அரசியலில் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் வெற்றி பெறுவார்களா? என்று மக்களிடம் கருத்து கேட்டதில், 51 சதவீதம் பேர் அவர்களால் வெற்றி பெற முடியாது என்று கூறி இருக்கிறார்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: