தன் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஆர்யா அபர்ணதியுடன் செய்த வேலை! வைரலாகும் புகைப்படம்!

0
891

கோலிவுட்டின் பிரபல நடிகர் ஆர்யா ஒரு முஸ்லீம் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழ் சினிமாவுக்கு பல வெற்றிப்படங்களைக் கொடுத்திருக்கிறார். இவருக்கு வயசு ஏறிக்கொண்டு போகிறது இன்னும் திருமணம் ஆகவில்லை என்ற பேச்சு இருந்து கொண்டே இருந்தது .

அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக ஆர்யாவுக்கு பெண் பார்க்கும் படலம் ஆரம்பிக்கப்பட்டது. தொலைக்காட்சி சேனல் ஒன்றில் எங்கள் வீட்டு மாப்பிளை நிகழ்ச்சியின் மூலமாக 19 பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். இவர்களில் ஆர்யாவை இம்ப்ரஸ் செய்யும் பெண்ணை அவர் திருமணம் செய்துக்கொள்ளவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிகழ்ச்சியில் பெண்கள் கலந்துக்கொண்டு பலரும் எலிமினேட் ஆகிவிட்டனர்.

இந்நிலையில், இதுநாள்வரை ஜெய்ப்பூரில் நடந்துவந்த எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி தற்போது கலந்து கொண்ட ஒவ்வொரு பெண்கள் வீட்டிலும் நடக்கிறது.

அதாவது, கடைசியாக எலிமனேட் ஆகாமல் இருக்கும் 5 பெண்கள்களின் வீட்டிற்கு நடிகர் ஆர்யா சென்று அவர்களின் குடும்பத்தாருடன் கலந்துரையாடுவார்.

அதுபோல, கும்பகோணத்தில் உள்ள அபர்ணதியின் வீட்டிற்கு ஆர்யா திடீர் விஜயம் செய்தார்.

அபர்ணதி குடும்பத்தினருடன் பேசிய ஆர்யா, அப்படியே அருகில் இருந்த இந்துக் கோவிலுக்கு சென்று வந்தார்.

ஒரு முஸ்லிமாக இருந்தும் எம்மதமும் சம்மதம் என ஆர்யா இந்துக் கோவிலுக்கு சென்று வந்தது பலராலும் பாராட்டப்பட்டு வருகின்றது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: