மிதுனம்
மிதுன ராசியினர்களுக்கு, சுக்கிரனும் செவ்வாயும் 7-ம் இடத்தில் சேர்க்கை பெற்றுள்ளனர். இதனால் மகிழ்ச்சியை தரும். திருமண வாழ்க்கையும் சந்தோஷத்தை தரும்.
வாழ்க்கை துணையுடன் உறவு இனிமையானதாக இருக்கும். தொழிலில் பொருளாதார வெற்றி கிடைக்கும்.
புதிய தொழில் தொடங்க சரியான நேரம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர்களுக்கு சுக்கிரனும் செவ்வாயும் இரண்டாம் வீட்டில் இணைந்துள்ளனர்.
இதனால், பண வரவு அமோகமாக கிடைக்கும். கிரகங்களின் சேர்க்கையின் போது நல்ல சக்தி கிடைக்கும்.
இதைத்தவிர வேலை வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தும்.
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். எனவே, இந்த கலவை இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்கும்.
கும்பம்
கும்ப ராசியினர்களுகு சுக்கிரன் செவ்வாய் 11-ம் வீட்டில் இணைந்துள்ளார். இதனால் நன்மை பயக்கும்.
தினசரி வருமானம் அதிகரிக்கும். ஊடகம், மருத்துவம், கலை, காவல் துறை சார்ந்தவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.
கணவன் மனைவி இடையே இருந்த விரிசல் சரியாகும். புதிய வீடு மனை வாங்க முற்படுவீர்கள்.