தனுசு சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

0

தனுசு: சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !

இதுவரை ஜென்ம சனியாக இருந்து உங்களை புயலைப்போல் புரட்டிப்போட்ட சனி பகவான், 27.12.2020 முதல் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து உங்களை ஆளப் போகிறார். குடும்பத்தினர் உங்கள் பேச்சுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அடிமனதில் இருந்த அச்சம் விலகும். உணர்ச்சிவசப்படாமல் அறிவுபூர்வமாக யோசிப்பீர்கள். உங்களைச் சுற்றி இருப்பவர்களின் சுயரூபத்தை அறிவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். உறவினர்கள், நண்பர்களுடன் நல்ல உறவு நீடிக்கும் என்றாலும் சனி பகவான் இப்போது 2-ம் வீட்டுக்கு வருவதால் கணவருடன் வாக்குவாதங்களும் கருத்து வேறுபாடுகளும் வர வாய்ப்பிருக்கிறது. உறவினர்களுடன் நிதானமாகப் பேசுங்கள். தேவைப்பட்டால் மௌனம் காப்பது நல்லது. சில காரியங்களைப் போராடி முடிக்க வேண்டி வரும். உங்களின் லாப வீட்டை சனி பகவான் பார்ப்பதால் திடீர்ப் பணவரவு உண்டு. வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. வியாபாரத்தில் முன்பு ஏற்பட்ட நஷ்டங்களை அனுபவ அறிவால் சரிசெய்வீர்கள். நல்ல பணியாளர்களைச் சேர்ப்பீர்கள். கூட்டுத்தொழிலில் முரண்டுபிடித்த பங்குதாரர்கள் இனி பணிவாக நடந்துகொள்வார்கள். உத்தியோகத்தில் உயர் பதவி கிட்டும். சக ஊழியர்கள் உங்களின் நல்ல மனதைப் புரிந்துகொண்டு நட்புறவாடுவார்கள். வீண் வதந்தி, விமர்சனங்களிலிருந்து விடுபடுவீர்கள். இந்த சனி மாற்றம் அசுர வளர்ச்சியையும், பணவரவையும், எங்கும் எதிலும் வெற்றியையும் தருவதாக அமையும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவிருச்சிகம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !
Next articleமகரம் சனிப்பெயர்ச்சி பலன்கள் – 27.12.2020 முதல் 19.12.2023 வரை !