தனது ஜாடையில் இல்லாத குழந்தைகள்! இரக்கமின்றி தந்தை செய்த கொடூரம்!

0

உத்திர பிரதேசத்தில் தந்தை ஒருவர் தனது 4 குழந்தைகளும் தன் ஜாடையில் இல்லை என சந்தேகப்பட்டு கொடூரமான செயலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மல்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரோஹ்டாஷ். இவருக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள்.

ரோஹ்டாஷுக்குத் தன் மனைவி வேறு யாருடனோ கள்ளத்தொடர்பு உள்ளதாகவும் அந்த குழந்தைகள் அனைத்தும் கள்ளத்தொடர்பில்தான் பிறந்ததாகவும் சந்தேகப்பட்டு வந்துள்ளார். மேலும் குழந்தைகள் அனைத்தும் தன் ஜாடையில் இல்லை எனவும் புலம்பியுள்ளார்.

இந்த சந்தேகத்தீ கொஞ்சம் கொஞ்சமாக அவருக்கு அதிகமாக கடந்த ஜூன் 9 ஆம் தேதி தனது 4 குழந்தைகளையும் கத்தரிக்கோலால் குத்தியுள்ளார். இதில் அவரது மகன்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர்.

மனைவியும் மகள்கள் இரண்டு பேரும் காயங்களுடன் தப்பியுள்ளார். இதையடுத்து ரோஹ்டாஷ் மேல் பொலிஸார் வழக்குப் பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவார ராசிப்பலன்- ஜுன் 16 முதல் 22 வரை !
Next articleதமிழ் பேசும் இளைஞர் யுவதிகளை தேடும் பொலிஸார்!