தனது ஆரம்பகால பிரபலத்திற்கு சிவகார்த்திகேயன் செய்த நன்றிகடன்- இப்படியும் சிலர் இருக்கின்றனர்!

0
430

தமிழில் மெரினா படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். பிறகு தனது நகைச்சுவையான நடிப்பால் பல ரசிகர்களின் அன்புக்கு சொந்தக்காரர் ஆனார்.

அவர் நடிப்பையும் தாண்டி படங்களை தயாரிக்கவும் செய்கிறார். இப்போது அவரது கலை ஆர்வம் பாடல் எழுதுவது வரை வந்துள்ளது. நயன்தாரா நடிப்பில் நெல்சன் இயக்கிய கோலமாவு கோகிலா படத்தில் அனிருத் இசையமைத்திருந்த கல்யாண வயசு பாடலை எழுதியிருந்தார்.

இது மிக பிரபலமடைந்துள்ள நிலையில் இந்த பாடலை எழுதியதற்காக தரப்பட்ட சம்பளத்தை தனது ஆரம்ப படமான மெரினாவுக்கு 3 பாடல்களை எழுதியிருந்த மறைந்த பிரபல பாடலாசிரியர் நா.முத்துகுமார் அவர்களின் குடும்பத்துக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.

இது சிவகார்த்திகேயனை பற்றிய நல்ல கண்ணோட்டத்தை மேலும் கூட்டியுள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: