சீரகத்தின் 15 வகையான மருத்துவப் பயன்கள்! சீரகக் குடிநீர் ! குடிப்பதால் இந்த நோய்கள் குணமாகும்!

0

நாம் எமது அன்றாட வாழ்வில் வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் சீரகம் பல்வேறுபட்ட மருத்துவ குணங்களைக் கொண்டது என்பது உங்களுக்கு தெரியுமா?

மருத்துவ மூலிகையான சீரகம், வயிற்றுப்பகுதியை சீரமைப்பதில் பெரும் பங்காற்றுகின்ற வகையில் சீர் + அகம் = சீரகம் என்பது இதற்கு மிகவும் பொருத்தமாக இருக்கும். மேலும், இதில் கார்ப்பு, இனிப்பு மற்றும் குளிர்ச்சித் தன்மை ஆகியன காணப்படுகின்றதுடன், இது மணத்திற்காகவும், சுவைக்காகவும், சமிபாட்டு தன்மைக்கான உணவுப்பொருட்களில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றது.

சீரகத்தின் 15 வகையான மருத்துவப் பயன்கள்

தாய்ப்பால் சுரப்பினை அதிகரிப்பதற்கு சீரகம் பாலூட்டும் தாய்மார்களுககான ஒரு சிறந்த பொருளாக காணப்படுகின்றது.

ஓமத்துடன் சிறிதளவான சீரகம் இட்டு கஷாயம் தயாரித்;து, சாப்பிட்டு வரும் போது, கடுமையான பேதி போக்கு உடனடியாக நிற்கும்.

மோருடன் சீரகம், இஞ்சி மற்றும் சிறிதளவான உப்பு சேர்த்துப் பருகி வரும் போது வாயுத் தொல்ல நீங்கும்.

சீரகத்தை இஞ்சி மற்றும் எலுமிச்சம் பழச்சாறில் கலந்து ஒருநாள் முழுவதும் நன்கு ஊறவைத்து, அதனை தினம் இரண்டு வேளைகள் வீதம் தொடர்சியாக மூன்று நாட்கள் சாப்பிட்டு வரும் போது, பித்தம் மொத்தமாக குணமடையும்.

தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் கலந்து நன்கு கொதிக்க வைத்து ‘சீரகக் குடிநீர்’ தயாரித்து, அதனை நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வரும் போது, எந்தவொரு சமிபாட்டுப் பிரச்சினையும் ஏற்படாது தடுப்பதுடன், நீர் மூலம் பரவக் கூடிய நோய்களைத் தடுப்பதுடன், பசி மற்றும் ருசியினையும்; தூண்டும்.

சுக்கு, சீரகம், மிளகு மற்றும் திப்பிலி ஆகியனவற்றைப் பொடித் தேனில் கலந்து சாப்பிட்டு வரும் போது சகல விதமான உடல் உள் உறுப்புகளையும் சீராக இயங்கச் செய்வதுடன், கோளாறு எதுவும் ஏற்படாது பாதுகாக்கும்.”ஓமம், சீரகம் கலவை வய்ற்றுக்கு மருந்து” என்பது சான்றோர் கருத்து.

கர்ப்பகாலத்தில் ஏற்ப்படும் வாந்தியைக் குறைப்பதற்கு எலுமிச்சம்பழச் சாற்றுடன் சீரக குடிநீரை சேர்த்துக் பருகி வருதல் வேண்டும்.

பசியின்மை, வயிற்றுப்பொருமல், சுவையின்மை மற்றும் நெஞ்செச்ரிச்சல் போன்றனவற்றிலிருந்து விடுதலை பெறுவதற்கு சீரகம், கொத்தமல்லி மற்றும் சிறிது இஞ்சி ஆகியனவற்றை மிதமாக வறுத்து நீரில் நன்கு கொதிக்கவைத்து, அதனை நன்கு வடிகட்டி தேநீர் போல வெல்லம் அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்து பருகி வருதல் நல்ல பலனைத் தரும்.

சீரகத்துடன், மூன்று பற்கள் பூண்டு சோர்த்து நன்கு அரைத்து, அதனை எலுமிச்சை சாறில் கலந்து குடித்து வரும் போது குடல் கோளாறுகள் குணமடையும்.

தினமும் மஞ்சள் வாழைப் பழத்துடன், சிறிதளவான சீரகம் சேர்த்துச் சாப்பிட்டு வரும் போது நாளடைவில் உடலின் நிறை குறைவடையும்.

சீரகத்தை மிதமாக வறுத்து, அதனுடன் கருப்பட்டி சேர்த்துச் சாப்பிட்டு வரும் போது, நரம்புகள் வலுப்பெறுவதுடன், நரம்புத் தளர்ச்சியும் குணமடையும்.

சிறிதளவான சீரகமும், திப்பிலியும் சேர்த்து பொடித் தேனில் நன்கு குழைத்து சாப்பிடும் போது, தொடர் விக்கல் குணமடையும்.

வாய்ப்புண் மற்றும் உதட்டுப்புண் போன்றனவற்றிற்கு சீரகம் மற்றும் சின்னவெங்காயம் இரண்டையும் மெதுவாக நெய்விட்டு வதக்கி உண்ணுதல் வேண்டும்.

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇரத்தக்குழாய்களில் படிந்திருக்கும் கொலஸ்ட்ராலை சுலபமாகக் கரைத்துவிடும் அற்புத கனி நெல்லி !
Next articleவிக்ரம் மனைவி பற்றி பலரும் அறியாத உண்மைகள்!