கூட்டு எண் 8 (17, 26) பிறந்தவர்கள் இந்த எண்காரரை திருமணம் செய்யக்கூடாது!

0

8ம் எண்கள் நபர்கள் உணர்ச்சி மிக்கவர்கள் என்றாலும் வலிமையானவர்கள்.
எல்லா எண் மனிதர்களையும் விட இவர்கள் மிகவும் விசுவாசமானவர்கள்.

ஆனால் இவர்களைப் பற்றி சரியாக புரிந்து கொள்ளாமல் எல்லோராலும் பெரிதும் துன்பப்படுவார்கள். 8ம் எண் பெண்கள் பொதுவாக தன்கள் திருமண வாழ்வில் கஷ்டப்படுவார்கள்.

ஆகவே இந்த எண் பெண்கள் தங்கள் ஜாதகத்திற்கு பொருத்தமான வரனைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வது நல்லது. காதலில் இருக்கும்போது மிகவும் விசுவாசத்தோடு இருப்பார்கள்.

காதல் மற்றும் உறவு என்று வரும்போது பெரும்பாலும் இவர்கள் நடைமுறையைப் பின்பற்றுவதில்லை. தங்கள் இதயம் சொல்வதை மட்டுமே கேட்டு நடக்கின்றனர்.

இவர்கள் யாரோடும் விரைவாக இணைவதில்லை, ஆனால் ஒருமுறை இணைந்துவிட்டால், தனது துணையை கண்மூடித்தனமாக நம்பத் தொடங்கிவிடுவார்கள்.

8ம் எண் நபர்கள் பொதுவாக 8ம் எண் அல்லது 4ம் எண் நபரோடு அதிக பொருத்தமாக இருப்பதைப் போல் உணர்வார்கள். ஆனால் இந்த இரண்டு எண்ணைக் கொண்ட நபர்களும் அதிகம் போராடுவார்கள் என்பதால் இவர்கள் திருமணம் செய்யாமல் இருப்பது நல்லது.

திருமண வாழ்க்கையில் பல்வேறு பிரச்சனைகள் இருந்தாலும் அதனை பொறுத்துக் கொண்டு போகும் தன்மைக் கொண்டவர்கள் 8ம் எண்கள் நபர்கள்.

ஆனால் ஆழமாக காயப்படுவதால் அந்த உறவில் இருந்து விலகும் முடிவையும் அவர்கள் எடுக்கலாம். அதனைத் தடுத்து நிறுத்த யாராலும் முடியாது. திருமண பந்தத்திற்கு சரியான ஒரு நபர் 8ம் எண் நபர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleவீட்டின் படுக்கை அறையில் இவற்றை எல்லாம் வைக்காதீர்கள்!
Next articleகொண்டைக்கடலை சுண்டலை சாப்பிடுவதால் இப்படி ஓர் அதிர்ஷ்டமா? சக்கரை நோயாளிகளே உடனே சாப்பிடுங்கள்!