தங்கச் சங்கிலி மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் அபகரிப்பு
வவுனியா கோவில்குளம் தபால்பெட்டிச் சந்திக்கு அருகே இன்று மதியம் பெண் ஒருவரின் ஒரு பவுண் தங்கச் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அபகரித்துச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்
கோவில்குளம் தபால்பெட்டிச் சந்தியில் உள்ள கடைத் தொகுதி ஒன்றில் பொருட்களை கொள்வனவு செய்து விட்டு நடந்து சென்று கொண்டிருந்த பெண்ணை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் கீழே தள்ளி விட்டு அவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை அபகிரித்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அப்பகுதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களின் சி.சீ.டி.வி கேமரா தரவுகளை சேகரித்து குற்றவாளிகளை அடையாளம் காண்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
உங்கள் கருத்துகளை இங்கே பதிக: