ட்ரம்ப் மீது பாலியல் குற்றச்சாட்டு- நடிகை திடீர் கைது!!

0
309

அமெரிக்க அதிபர் தேர்தலின் போது ட்ரம்ப் மீது பாலியல் புகார் கூறிய ஆபாச திரைப்பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸை அமெரிக்கப் பொலிஸார் திடீரெனக் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவில் ஆபாச திரைப்படங்களில் நடிக்கும் நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ட்ரம்ப் மீது பகிரங்கமாக பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தார் ஸ்டார்மி.

இதனால், ட்ரம்பின் செல்வாக்கு சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அமெரிக்க அதிபராக ட்ரம்பையே தேர்வு செய்தனர் அமெரிக்க மக்கள். பாலியல் குற்றச்சாட்டை வெளியே சொல்லாமல் இருக்க ட்ரம்ப் சமரசம் செய்தது பின்னர் தெரியவந்தது.

இந்த விடயம் குறித்து யாரிடமும் கூறாமல் இருக்க வேண்டும் என்பதற்காக பல லட்சம் டடொலர்களை ட்ரம்ப் வழங்கியதாகவும் ஸ்டார்மி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வேறு ஒரு வழக்குத் தொடர்பாக ஸ்டார்மியை அமெரிக்கப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கேளிக்கை விடுதி நடத்தி வரும் நடிகை ஸ்டார்மி, அங்கு இளைஞர் ஒருவர் தன்னை தகாத முறையில் தொட அனுமதித்தாகக் குற்றம்சாட்டப்பட்டு, அதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்து ஸ்டார்மியின் வழக்கறிஞர் கூறுகையில், “இது ட்ரம்பின் திட்டமிட்ட பழிவாங்கும் செயல். விரைவில் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை வெளிப்படுத்தி ஸ்டார்மி குற்றமற்றவர் என்று நிரூபிப்போம்” என்றார்.

இதனிடையே ட்ரம்பின் இந்த நடவடிக்கை எதிர்ப்பார்த்தது தான் என்றும், காத்திருந்து இந்த பழிவாங்கும் முயற்சியில் ட்ரம்ப் ஈடுபட்டுள்ளதாகவும் அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.

நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் கடந்த வாரத்தில் ட்ரம்ப் மீது அவதூறு வழக்கு ஒன்றைத் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: